"நமது தலையை மொட்டையடிக்கும் காரியங்கள், ரகசியமாக அரங்கேறுகின்றன"
ரணில் மைத்ரி அரசாங்கதால் உருவாக்கப்படும் புதிய பயங்கரவாத தடைச்சட்டம் முஸ்லிம்களை குறிவைத்து தயாரிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு அரசாங்கம் இது வரை தெளிவான பதிலைத்தராமை சந்தேகத்தை தருகிறது என முஸ்லிம் உலமா கட்சி தெரிவித்துள்ளது.
இது பற்றி அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாட்டில் யுத்தம் முடிந்த நிலையிலும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவில்லை என்பது கடந்த மஹிந்த அரசின் மீது எதிர் கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும். நல்லாட்சி என சொல்லிக்கொண்டு வந்த இந்த அரசும் மேற்படி சட்டத்தை இன்னமும் நீக்காததன் மூலம் மஹிந்த அரசையே இவர்களும் பின்பற்றுகிறார்கள் என்பது தெரிகிறது.
அதே வேளை இந்த அரசு இன்னொரு படிமேல் சென்று முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து அவர்களின் ஜனநாயக குரல்களையும் உரிமைகளையும் ஒடுக்கும் வகையில் புதிய பயங்கரவாத சட்டம் உருவாக்கப்போவதாக சொல்லப்படுகிறது. இதனை அண்மையில் இலங்கை வந்த ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை இன விவகாரங்களை ஆராயும் நிபுணர் ரீட்டா ஐசக் நாடியாவிடம் முஸ்லிம் சட்டத்தரணிகள் கொடுத்த மகஜரிலும் இது பற்றிய அச்சம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அதே வேளை முஸ்லிம்களை பாதிக்கும் வகையில் இச்சட்டம் கொண்டு வரப்பட்டால் அதற்கு நாம் விடமாட்டோம் என அமைச்சர் ஹிஸ்புள்ளா தெரிவித்துள்ளார். ஆனால் முஸ்லிம் அமைச்சர்கள் எவ்வளவு குதித்தாலும் பேரினவாதிகள் தாம் நினைத்ததை செய்து முடிப்பதையே நாட்டில் நாம் காணும் யதார்த்தமாகும். ஆக குறைந்தது இந்தச்சட்டத்தின் மூலப்பிரதியையாவது, அல்லது இதற்கான அரசின் உத்தரவுகள் அடங்கிய தொகுப்பையாவது அமைச்சர் ஹிஸ்புள்ளா முஸ்லிம் சமூகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என உலமா கட்சி அவரை விணயமாக கேட்கிறது.
ஆகவே முஸ்லிம் மக்கள் ஏதோ நல்லாட்சியை கொண்டு வந்து விட்டோம் இனி எல்லாம் நன்றாகவே நடக்கும் என இதுவரை தூங்கிக்கொண்டிருந்தது போல் தூங்க முடியாது. நல்லாட்சி என்ற மயக்க மருந்தை தந்து விட்டு நமது தலையை மொட்டையடிக்கும் காரியங்கள் ரகசியமாக அரங்கேறுகின்றன என்பதை புரிந்து விழிப்படைய வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்வதாக அதன் தலைவர் கலாநிதி முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.
அதுக்கென்ன?
ReplyDeleteஉங்களுடைய தொப்பியை அணிந்தால் மொட்டை தெரியாது தானே!
மொட்டையும் மறையும் - முடி இருக்கும்போது.
ReplyDeleteஉங்களிடம் ததொப்பி இருக்குதானே! Don't worry be happy
ReplyDeleteமொட்டையடிக்கும் காரியங்கள் என முபாரக் மௌலவி விளித்தது, பயங்கரவாத தடைச் சம்பவம் பற்றியது.
ReplyDeleteஒருவர் அணியும் தொப்பி சம்பந்தப் பட்டது அல்ல.