நோயாளியை கொண்டுசெல்லும் வழியில், தேங்காய் வாங்கிய அம்பியூலன்ஸ் சாரதி பணிநீக்கம்
அவசர சிகிச்சைகளுக்காக நோயாளியொருவரை கொண்டு செல்லும் வழியில் வர்த்தக நிலையத்திற்கு சென்று தேங்காய் கொள்வனவு செய்ததாக அம்பியூலன்ஸ் வண்டி சாரதியொருவர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள சாரதியை பணிநீக்கம் செய்வதற்கு சப்ரகமுவ மாகாண சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த 19 ஆம் திகதி எம்பிலிப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளியொருவர் சி.டி.ஸ்கேன் பரிசோதனைக்காக இரத்தினபுரி வைத்தியாசாலைக்கு அம்பியூலன்ஸ் வண்டியில் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
பரிசோதனைகள் நிறைவடைந்து மீண்டும் எம்பிலிப்பிட்டி வைத்தியசாலைக்கு திரும்பும் வழியில் அம்பியூலன்ஸ் வண்டியின் சாரதி, தேங்காய் கொள்வனவு செய்வதற்கு வர்த்தக நிலையமொன்றிற்கு சென்றுள்ளார்.
சுமார் அரை மணித்தியாலங்கள் வரை குறித்த சாரதி வர்த்தக நிலையத்திலிருந்து வரவில்லை.
இது தொடர்பான காணொளிகள் சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து ஆரம்ப கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் டொக்டர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
Nothing will happen it is very common in srilanka.
ReplyDelete