Header Ads



கௌரவத்திற்குரிய உலமா அப்துல்லாஹ் ஆலிம் - முஸ்லிம் கவுன்சில் அனுதாபம்

காலம்சென்ற அப்துல்லாஹ் ஆலிம், கௌரவத்திற்குரிய உலமா என முஸ்லிம் கவுன்சில் சார்பில் அதன் தலைவர் என்.எம். அமீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அவர் மரணிக்க முன் சில தினங்களுக்கு முன் அவரை நேரடியாக பார்வையிட முடிந்தது. இயலாத அந்த வேளையிலும் எங்களைக்க ண்டதும் தன்னால் முடிந்தவரை கைகளை நீட்டி சலாம்கூற முயன்றார்.

அவர் கடந்த 40 வருடங்களால் இலங்கை சமூகத்திற்கும், காத்தான்குடி மக்களுக்கும் அளப்பரிய சேவையாற்றினார். இலங்கையின் பிரதான முஸ்லிம் அடையாளங்களில் ஒன்றான சம்மான்கோட்டை பள்ளிவாசல் (சிவப்பு) ஆகும். இந்த பள்ளிவாசலுக்குரிய காணியை வக்பு செய்தவர் அப்துல்லாஹ் ஆலிமுடைய தந்தை ஆவார். அதனை நவீன வடிவமைப்பதில் அப்துல்லாஹ் ஆலிம் பங்காற்றினார். 

அவரது சேவைகளை இப்படியே நாம் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

அவரது மறைவால் துயரடையும் அவரது குடும்பத்தினருக்கு முஸ்லிம் கவுன்சில் தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது  என முஸ்லிம் கவுன்சில் விடுத்துள்ள அந்த அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. What I have learned, when a Muslim passed away we need to say innalillahwsiinnaillihirajioon. Not a sympathy massage, because we also talking the same journey. My humble request is a leanered person on Islam please clarify this please.

    ReplyDelete

Powered by Blogger.