தென்கிழக்குப் பல்கலையில், சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
தென்கிழக்குப் பல்கலைக்கழக, தொழில் வழிகாட்டல் பிரிவும், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்ட வழிகாட்டல் பிரிவும், இணைந்து கடந்த வருடம் நடாத்திய 'இளைஞர் தலைமைத்துவ அபிவிருத்தி நிகழ்ச்சிக்கான பயிற்சித் திட்டத்தில் கலந்து பயிற்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 20ம் திகதி வியாழக் கிழமை, கலை 9 மணிக்கு இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீட மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும்.
பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் பிரிவின் பணிப்பாளரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான எம். எஸ். எம். ஜலால்தீன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் எம். எம். எம். நாஜீம் அவர்களும், விஷேட அதிதிகளாக அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் திரு. ஆஷித பி. வணிகசிங்க அவர்களும், ருNனுP யின் நிகழ்ச்சி முகாமையாளர் திரு முஹம்மது முஸையின் அவர்களும், கௌரவ அதிதிகளாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் திரு வீ. ஜெகதீஸன், இறக்காமம் பிரதேச செயலாளர் திரு. எம். எம். எம். நஸீர், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திரு எஸ். கரன், பொத்துவில் பிரதேச செயலாளர் திரு. என். எம். முஹம்மத் முஸர்ரத், சம்மாந்துறை பிரதேச செயலாளர் திரு மன்சூர், திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு, எஸ் ஜகராஜன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இப் பயிற்சி நெறியை பூர்த்தரசெய்த 97 அம்பாரை மாவட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள்; வழங்கப்படவுள்ளன. இந்நிகழ்வில் பல்கலைக்கழக பீடாதிபதியினர், உதவிப் பதிவாளர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
Post a Comment