இஸ்லாம் இலங்கையில், தவறாக புரியப்பட்டுள்ளது - றீட்டா
முஸ்லிம்களை தனியான இனமாக கருதி, பிரச்சினைகளை தீர்க்குக - ஐ.நா. விசேட அறிக்கையாளர் ரீட்டா அரசாங்கத்திடம் கோரிக்கை
-MBM.Fairooz-
-MBM.Fairooz-
இந்த நாட்டு முஸ்லிம்கள் போரினாலும் அதன் பின்னர் இடம்பெற்ற மத வன்முறைகளாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை என்பதை நான் உணர்கிறேன். எனவே இலங்கை அரசாங்கம் முஸ்லிம்களை தனியான இனமாக கருதி அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் அதற்கான பொருத்தமானதும் விசேடமானதுமான பொறிமுறை ஒன்றை உருவாக்க முன்வர வேண்டும் என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சிறுபான்மை விவகாரங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நதேயா குறிப்பிட்டார்.
இலங்கைக்கு 10 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த அவர் தனது விஜயத்தின் இறுதியில் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடாத்தினார்.
இதன்போது ''இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான உங்களது பிரதான கண்டறிதல்கள் என்ன?'' என விடிவெள்ளி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ரீட்டா ஐசாக் நதேயா இலங்கை முஸ்லிம்களின் விவகாரங்கள் தொடர்பில் தான் நடாத்திய சந்திப்புகள் குறித்து மேலும் கருத்து வெளியிடுகையில்,
முஸ்லிம் சிறுபான்மை சமூகம் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் எமது சந்திப்புகளில் கலந்துரையாடப்பட்டன. இவற்றில் காணிப் பிரச்சினைகள், இடம்பெயர்வு மற்றும் மீள்குடியேற்றம் என்பன பிரதானமானவையாகும். அத்துடன் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் மற்றும் அவர்களுக்கு புகலிடம் அளித்த மக்களின் பிரச்சினைகள் குறித்தும் எனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டன.
எனினும் அரசாங்கத்தின் முக்கியமான முன்னெடுப்புகளில் முஸ்லிம்களின் விவகாரம் உள்ளடங்கப்படவில்லை எனும் கவலையை பலரும் என்னிடம் வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக போரினால் தமது சமூகமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம்கள் கவலைப்படுகின்றனர்.
1990 இல் சுமார் 30000 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வடக்கு கிழக்கிலிருந்து வெளியேறியதாகவும் அவர்களில் 20 வீதமானோர் மாத்திரமே இதுவரை தமது சொந்த இடங்களில் மீளக்குடியேறியுள்ளதாகவும் எனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இது மிகப் பெரிய எண்ணிக்கையாகும்.
முக்கியமான பல்வேறு விடயங்களில் முஸ்லிம்களின் நலன்கள் உள்ளடக்கப்படவில்லை என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. எனவே முஸ்லிம்கள் தனியான இனமாக கருதப்பட்டு அரசாங்கத்தின் சகல முன்னெடுப்புகளிலும் கண்டிப்பாக உள்வாங்கப்பட வேண்டியது அவசியமாகும். முஸ்லிம்களின் பிரச்சினைகள் தனித்துவமான கவனத்தை வேண்டி நிற்கின்றன.
முஸ்லிம்களுக்கும் தமிழ் மற்றும் சிங்களவர்களுக்குமிடையிலான உறவு தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது. அத்துடன் மத சுதந்திரமும் மிக முக்கியமான விடயமாகும். பள்ளிவாசல்கள் மீதான பல தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் இஸ்லாம் பற்றி பிற மதத்தவரின் புரிதல்களில் குறைபாடுகள் உள்ளதாக முஸ்லிம்கள் கவலைப்படுகின்றனர். ஏனெனில் பாடசாலைக் கல்வியில் இஸ்லாம் தொடர்பில் பிற மதத்தவர்களுக்குப் போதுமானளவு போதிக்கப்படுவதில்லை. இஸ்லாம் என்ற பதம் தவறாக விளங்கப்பட்டுள்ளது. இது ஏதோ ஒரு புள்ளியில் தமக்கு பாதகமாக அமையலாம் என முஸ்லிம்கள் கவலைப்படுகின்றனர்.
குறிப்பாக திருமணம், மற்றும் விவாகரத்தில் 1951 ஆம் ஆண்டு முஸ்லிம் திருமண, மற்றும் விவாகரத்தின் சட்டமூலம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த சட்டமூலமானது 16வயதுக்குக் குறைந்த பிள்ளைகள் திருமணம் முடிப்பதற்கு அனுமதிக்கிறது. இது தொடர்பில் ஆராய்வதற்கு ஏழுவருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட குழு இன்னும் தனது அறிக்கையை கொடுக்கவில்லை.
குறிப்பாக சிறுபான்மை மக்களின் தனிப்பட்ட சட்டங்களான கண்டியன், தேசவழமை, மற்றும் முஸ்லிம் சட்டம் என்பன சர்வதேச மனித உரிமை தரங்களுக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும்.
அரசியலமைப்பின் 16ஆவது சரத்தானது முஸ்லிம் பெண்களுக்கு பிரச்சினைக்குரியதாக உள்ளதாகவும், புதிய அரசியலமைப்பில் அது உட்படுத்தப்படக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.
அந்த வகையில் அரசாங்கத்திற்கு முக்கியமானதொரு பரிந்துரையை முன்வைக்கிறேன். அதாவது அரசியலமைப்பின் கீழ் தெளிவான ஆணை, மற்றும் அதிகாரம், வளங்களுடன் சிறுபான்மை மக்கள் தொடர்பாக சுயாதீன ஆணைக்குழுவொன்றை நிறுவுமாறு அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்கின்றேன்.
அனைத்து தனிப்பட்ட சட்டங்களும் குறிப்பாக 1951 ஆம் ஆண்டு முஸ்லிம் திருமணம் மற்றும் விகாரத்து சட்டமூலம் சர்வதேச மனித உரிமை தரங்களுக்கமைய முஸ்லிம் சமூகம், மற்றும் முஸ்லிம் பெண்களின் ஆலோசனையுடன் மீளாய்வு செய்யப்படவேண்டும்.
Excellent job.
ReplyDeleteஆம் உண்மை இலங்கையில் இஸ்லாம் தவறான புரிதலில் இன்றும் உள்ளது
ReplyDeleteஇதை அல் குர்ஆன் தெளிவாக சுட்டிக் காட்டி கொண்டு சாட்சியாக உள்ளது
சகோதரி சரியாக சொல்லி உள்ளீர்கள்
மற்று மத சகோதரிக்கு தெரிந்த உண்மை இலங்கையில் உள்ள முஸ்லிம் என்று சொல்லி கொண்டு இருப்பவர்களுக்கு இன்னும் புரியவில்லை என்பது வெட்க கேடு
பாடசாலையில் இஸ்லாத்தை ஏனையமதத்தவர் ஏன்கற்க வேண்டும்.இந்து பௌத்தம் கீறீஸ்தவ மதங்களை கற்க முஸ்லீம்கள் தயாரா?
ReplyDeleteமாஷா அல்வாலாஹ்ன தெளிவான கருத்து அஊல்லாஹ் ஹிதாயத் கொடுக்கட்டும்
ReplyDeleteஏற்கனவே முஸ்லீம்கள் ஏனைய மதங்களை கற்றுக்கொண்டு வருவது குமாா் குமாரனுக்கு தொியாது போல.
ReplyDeleteஒவ்வொரு முஸ்லிமும் வேதங்களை நம்ப வேண்டும் என்பது நம்பிக்கையில் அல்லாஹ், வானவருக்கு அடுத்து வருவது. இஸ்லாம் உலக மக்களுக்காக இறைவனால் இறக்கி அருளப்பட்டது. அதில் புதிதாக எதனையும் அல்லாஹ் கொடுத்துவிடவில்லை எனவும், முந்திய வேதங்களில் கூறப்பட்டதைத் தவிர என்றும் கூறியுள்ளான்.
ReplyDeleteமேலும், இஸ்லாம் முன்னைய வேதங்களை உண்மைப்படுத்தி, சாட்சியம் கூறுவதற்காக அருளப்பட்டது என்பதால், அனைத்து வேதங்களையும் அறிவதும், அவற்றைக் கொணர்ந்தவர்கள் பற்றி அறிவது அத்தியாவசியமே!