மொசூல் நகரத்தில் இருந்து வெளியேறிய, ஆயிரக்கணக்கான ஈராக் மக்கள் பரிதவிப்பு
மொசூல் நகரத்தில் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பிற்கு எதிராக பெரிய அளவில் இராக் அரசு தாக்குதலைத் தொடர்ந்து நடத்தும் வேளையில், ஆயிரக்கணக்கான இராக் மக்கள் அங்கிருந்து வெளியேறிய பிறகு, மோசமான சூழ்நிலைகளில் தவித்து வருகின்றனர்.
கடந்த பத்து நாட்களில், எல்லையைக் கடந்து சிரியாவில் உள்ள ஒரு முகாமிற்கு 5,000 பேர் வந்துள்ளதாக, 'சேவ் தி சில்ட்ரன்' என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
மக்கள் அதிக அளவில் அங்கு வருவதால், முகாமில் உள்ள வசதிகள் அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத ஆபத்து இருப்பதாக தொண்டு நிறுவன ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
முகாமில் உள்ள மோசமான நிலைகளைப் பற்றி விவரிக்கும் போது, ஒரு தொண்டு நிறுவன ஊழியர் தான் பார்த்ததிலேயே மிக மோசமான நிலை உள்ளது என்றும், அகதிகள், அழுக்கடைந்த இடத்தில், அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவிப்பதாகவும் தெரிவித்தார்.
மொசூலில் போர் தீவிரமடையும் போது,லட்சக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற வாய்ப்புள்ளது என்று தொண்டு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
Post a Comment