Header Ads



இணைந்த வட- கிழக்கினை ஏற்படுத்தும்போது, தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் பலப்படுத்தப்படும் - சம்பந்தன்

முதலமைச்சரின் கோசங்களுக்கு அப்பால் தமிழ் பேசும் மக்கள் இணைந்த வட-கிழக்கினை ஏற்படுத்தும் போது தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் பலப்படுத்தப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியில் நேற்று(22) மாலை நடைபெற்ற கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 

நாங்கள் எமது கலை, கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம் என்பவற்றோடு இணைந்துதான் வாழ்ந்து வருகின்றோம். எமது தமிழ்த் தேசிய இனம் பல்லாயிரம் ஆண்டுகளாக ஒரு தனித்துவமான இனமாக வாழ்ந்தது மாத்திரமல்ல அவர்களது கலை, கலாசாரத்தையும் வளர்த்து வந்திருக்கின்றார்கள்.

மட்டக்களப்பு என்பது நாட்டின் ஒரு முக்கியமான மாவட்டமாகும். யாழ்ப்பாண மாவட்டத்திற்கு அடுத்ததாக தமிழ் மக்கள் கூடுதலான அளவில் வாழ்கின்ற மாவட்டமாகும். கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களிலும் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக இருக்கின்றார்கள்.

நாடு சுதந்திரமடைந்த பின்னர் வேறு மாகாணங்களிலும் பார்க்க கூடுதலான அளவு கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையினத்தவர்களின் குடியேற்றம் நடைபெற்றிருக்கின்றது. குறிப்பாக அம்பாறை மாவட்டத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் பெரும்பான்மையினத்தவர்களின் குடியேற்றங்கள் கூடுதலான அளவில் இடம்பெற்றன.

நாடு சுதந்திரமடைந்த 1947ஆம் ஆண்டு காலம் தொடங்கி 1981ம் ஆண்டு வரை வெளியிடப்பட்ட புள்ளி விபரங்களின் அடிப்படையில் இந்த நாட்டில் பெரும்பான்மையினத்தவரின் தொகை 238 ஆல் அதிகரித்தது. அதாவது இரண்டரை வீதத்தினால் அதிகரித்தது. அதே காலப் பகுதியில் கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த பெரும்பான்மையினத்தவரின் தொகை 875 ஆல் அதிகரித்தது. இது ஏறத்தாள ஒன்பது வீதம் ஆகும்.

வட-கிழக்கு இணைப்பினைப் பற்றி நாங்கள் பேசி வருகின்றோம். தந்தை செல்வநாயகம் அவர்கள் பிரதமருடன் 67ஆம் ஆண்டு பிரதமர் பண்டாரநாயக்காவுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டார். வடக்கு ஒரு பிராந்தியமாக இருக்கும் என்றும் கிழக்கில் இரண்டு அதற்கு மேற்பட்ட பிராந்தியங்கள் இருக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது. பெரும்பான்மையாக தமிழர்கள் வாழும் திருகோணமலையும் மட்டக்களப்பும் ஒரு பிராந்தியம். பட்டிருப்புக்கு தொகுதிக்கு தென் பகுதியில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதி ஒரு பிராந்தியமாகவும் சிங்கள மக்கள் அதிகவில் குடியேற்றப்பட்ட அம்பாறை பிரதேசம் இன்னுமொரு பிராந்தியமாகவும் இருப்பதாக அதில் கூறப்பட்டிருந்தது.

அந்த ஒப்பந்தத்தில் மாகாண எல்லைகளுக்கு அப்பால் பிராந்தியங்கள் இணையலாம் என்ற மிக முக்கியமான விடயம் கூறப்பட்டுள்ளது. திருகோணமலையும் மட்டக்களப்பும் வடமாகாணத்துடன் இணைந்திருக்கலாம். முஸ்லிம் மக்கள் பெரும்பாலாகவுள்ள பிராந்தியமும் விரும்பினால் இணைந்து கொள்ளலாம்.

இதனடிப்படையிலேயே 1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டு ஒரு பிராந்தியமாக அரசியல் அதிகாரம் பகிர்ந்து தரப்படுமென கூறப்பட்டது. அது உயர் நீதிமன்ற தீர்ப்பினால் தற்போது அற்றுப் போயிருக்கின்றது. அந்தத் தீர்ப்பினை ஒரு நியாயமான தீர்ப்பாக நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இணைப்பு ஏற்படுத்தப்பட்ட விதத்தில் தவறு இருப்பதாக கூறி வடக்கு, கிழக்கு துண்டிக்கப்பட்டது. நாங்கள் ஏன் தமிழ் பேசும் மக்களுக்கு இந்த நாட்டில் ஒரு தனிப் பிராந்தியம் இருக்க வேண்டும் என்று கேட்கின்றோம் எனத் தெரிவித்தார்.

23 comments:

  1. வடகிழக்கு இணைப்புஇணைப்பு என்று கிழக்கு தமிழர்களுக்கு ஆசைகாட்டிவிட்டு மோசம் செய்து விடவேண்டாம்.மூஸ்லீம்களுக்கான அலகு குறித்து பேசியிருக்கிறீர் தற்போதைய நிலையிலேயே அம்பாறை தமிழர்கள் ஓரங்கட்டப்படுகின்றனர் தென்கிழக்கில் தமிழர்க்கு பாதுகாப்பை யார் உறிதி செய்வது.

    ReplyDelete
  2. அம்பாறை தமிழர்களை அநாதைகள் ஆக்காதீர்கள்.முஸ்லீம்காங்ரஸ் தென்கிழக்கு அலகை கைபற்றினால் தமிழரை அனுசரிப்பர்.ஆனால் ரிசாத் கட்சியோ அதாவுல்லா கட்சியோ தென்கிழக்கை கைபற்றினால் தமிழருக்கு சாவுமணிதான்.

    ReplyDelete
    Replies
    1. தென்கிழகென்று ஒரு சிறியப்பகுதிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக காட்டிக்கொண்டு பின்னர் அதை முஸ்லிம்களுக்கு வழங்குகின்றோம் என்று காட்டிக்கொண்டு கிழக்கில் மற்றைய முஸ்லீம் சிங்கள ஊர்களை உங்கள் கூட்டம் எப்படி விழுங்க பார்க்கின்றது என்கிற சூழ்ச்சிகளையும் நாம் அறிவோம்

      Delete
    2. முஸ்லீம்கள் சிறியபகுதியில் அதிக இனப்பெருக்கதுடன் வாழ்கிறார்கள்அதற்கு நாம் என்ன செய்ய முடியும். உமது வீட்டில் அங்ஙகத்தவர் அதிககரித்தால் பக்கத்து வீட்டுகாரனை தீட்டுவீரா?

      Delete
    3. உன் இனத்தின் ஆண்மை குறைபாட்டை நான் இங்கு பேசவரவில்லை கருத்தோடு மோத வக்கிலாதவனின் இறுதி ஆயுதம் தனி மனித வசைபாடல். பொது விடயம் பற்றி பேசும்போது அதை மட்டும் கதை. உன் ஈன விடுதலை பண்ணிகளின் தற்கொலை குண்டு தாக்குதல் எனும் கோலை தனத்திற்கு ஒப்பானது உன்னுடைய தனிமனித தாக்குதல். தலைகனத்தோடு ஆடாதே. தலைக்கனதால் தலை சிதறி செத்த பிரபாகரன் எனும் தீவிரவாதியை நினைவில் கொள்

      Delete
    4. @IRMSதனிமனித வசைபாடல் யார் செய்வது.

      Delete
    5. @IRMS இனப்பெருக்கம் செய்வது மட்டும் தான் ஆண்மையா?முட்டாள்.வாதம் புரிய திறமை இல்லா விட்டால் ஒதுங்கு.சும்மா கத்தாதே.

      Delete
  3. என்ன பெரியவரே! இலங்கையின் எதிர்க்கட்சிகளைப் பிரதிநித்துவப்படுத்தும் குறிப்பாக சிறுபான்மையினரைப் பிரதிநித்துவப்படுத்தும் நீங்கள் உங்கள் இனத்தை உயர்த்தி மற்ற பெரும்பான்மையான சிறுபான்மை இனத்தைத் துண்டாட திட்டமிடுகின்றீர்களே இது நியாயமாகத் தென்படுகின்றதா உங்களுக்கு வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் போது தமிழ் இனம் பலப்படும் அதேநேரம் முஸ்லிம் இனம் துண்டாடப்படுவது உங்களுக்குப் புரியவில்லையா? பெரியவரே, பொறுப்பான பதவியை வகிக்கும் தாங்களிடமிருந்து இந்த நாட்டின் சிறுபான்மை சமூகங்கள் நீதியையும் நியாயத்தையும் மட்டும்தான் எதிர்பார்க்கின்றது.

    ReplyDelete
  4. சம்பந்தன் ஐயா அவர்களே, வடக்கும் கிழக்கும் இணைவதட்கு நீங்கள் கூறும் காரணங்களை, இணையாமல் தனித்தனி மாநிலங்களாகவே இருந்து அடைந்து கொள்ளலாம். வடக்கும் கிழக்கும் இணைவதால் கிழக்கில் வாழும் எல்லா இன மக்களுக்கும் பாதகமே. கிழக்கின் அரசியல், பொருளாதாரம், இயறகை வளங்கள் அனைத்துமே வடமாகாண ஆட்சியாளர்கள் அவதரித்து கொள்வார்கள். அவ்வாறு அது இணைத்தால் நிட்சயமாக கிழக்கு மாகாண எதிர்கால சந்ததிகள் வடகிழக்கு பிரிவினைக்காக இனம், மதம், மொழி என்ற பாகுபாடு அற்று அணைத்து மக்களும் போராடும் நிலை ஏட்படும். நீங்களும் கிழக்கு மாகாணம் தான் எனவே உங்கள் சந்ததியும் உங்களை திட்டும். எழுதி வையுங்கள். இது தான் யதார்த்தமும், உண்மையும்.

    ReplyDelete
    Replies
    1. வடக்கில் 8900 .ச.கி மீட்டர் பரப்பளவில் இல்லாத வளமா கிழக்கு முஸ்லீம்களின் 875 ச.கி.மீ பரப்பளவில் உள்ளது.
      நீங்க கிழக்கு தமிழருக்கு ஓட்டை மாகண மாகாணசபையை வைத்தே அட்டூளியம் செய்யுறீங்க அதிகாரம்கிடைச்சா என்ன வெல்லாம் பண்ணுவீங்க.
      ஆடு நனையுதெண்டு ஓநாய் கவலை படுவது போல் உள்ளது உமது கருத்து.
      உங்களுடைய 9%நிலப்பரபை அபகரித்து தான் நாம் வாழபோவதில்லை.
      கபடநாடகமாடீ தமிழர்நிலங்களை அபகரிக்க நினைக்காதே.
      நீங்கள் ஒரு ஆணியும் புடுங்கவேணம்.

      Delete
    2. @Kuruvi கல்முனையில் தமிழர்நிலங்களை அபிவிருத்தி யென்ற போர்வையில் அபகரிக்க முயலும் நீங்கள் நியாயம் கதைக்குறீர்கள்.தமாஷீ...தமாஷீ

      Delete
  5. ஐயா சம்மந்தன் அவர்களே,
    திருகோண மலையை பிறப்பிடமாக கொண்ட உங்களுக்கு, உங்களது மாவட்டத்தின் பெரும்பான்மை இனம் எது என்று தெரியாமல் இருப்பது நகைப்பிட்குரியது.
    நான் தெரியாமல்தான் கேட்கின்றேன் தமிழ் பேசும் மக்கள் வடக்கிலும் கிழக்கிலும் மாத்திரம்தான் உள்ளனரா???
    ஏனைய மாகாணங்களில் உள்ள தமிழ் பேசும் மக்களை (தமிழர்களை) நீங்கள் கண்டு கொள்ளாதது ஏன்????

    ReplyDelete
    Replies
    1. @Abdul இந்தியாவில் கஷ்மீர் தவிர்ந்த ஏனைய மாநிலங்களில் அதிகளவில் முஸ்லீம்கள் வாழ்கின்றார்கள் ஏன் கஷ்மீர் முஸ்லீம்கள் கஷ்மீருக்ககாக மட்டும் பேராடுகிறார்கள் எனற கேள்விக்கு என்ன பதிலோ அதே பதில்தான் உமது கேள்விக்கும் பதில்.
      அரைவேக்கட்டு தனத்தை பகிரஙங்கப்படுத்தி உம் அறியாமையை வெளிப்படுத்தி யுள்ளீர்.

      Delete
    2. திருகோணமலை குறித்து நீர் சொல்லிதமிழர் அறிய வேண்டிய அவசியமில் யுத்தத்தால் இடம்பெயர்ந்து இந்தியாவில் உள்ள 100000 பேரில் 50%க்கு மேற்பட்டோர் திருகோணமலையை சேர்ந்தவர்கள்.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. @Abdul, வடகிழக்குக்கு வெளியே வாழ்கின்ற மக்களின் நலன்களை மனோ கணேசனுடாக கவனிக்கப்படுகறது தானே.

      Delete
  6. பொய்யன் கணபதி குமார் உனக்கு கிழக்கு மாகாணத்துக்கும் வடக்கு மாகாணத்துக்கும் பரப்பளவு வித்தியாசம் தெரியாதா ? ஏன் பொய் சொல்லி மக்களை ஏமாற்ற பார்க்கிறாய்.

    Area -
    • Total 9,996 km2 (3,859 sq mi)
    • Land 9,361 km2 (3,614 sq mi)
    • Water 635 km2 (245 sq mi) 6.35%
    Area rank 2nd (15.24% of total area)


    Area -
    • Total 8,884 km2 (3,430 sq mi)
    • Land 8,290 km2 (3,200 sq mi)
    Area rank 3rd (13.54% of total area)

    பொய் சொல்ல கூடாது பாப்பா.........

    ReplyDelete
    Replies
    1. @Shifak Shimak எனக்கு கிழக்கு பற்றி எல்லாம் தெரியும் கிழக்கில்
      9996.கீ.மீ பரப்பில் 875 ச.கி.மீ பரப்பள வே முஸ்லீம் பிரதேசம்.4895ச.கீ. மீ பரப்பு தமிழர் பிரதேசம்.கிழக்கு நிலப்பரப்பில் 9%மட்டுமே முஸ்லீம் நிலப்பரப்பு.
      பதிவை வாசிக்காமல் பதில் எழுதக்கூடாது.
      புறம் சொல்லல் ஆகாது பாப்பா..ஹீ,.ஹீ

      Delete
    2. நான் கிழக்கு முஸ்லீம்களின் நிலப்பரப்பு 875ச.கி.மீ என்றே குறிப்பிட்டேன் வாசிக்க கூடா தெரியா உமக்கு.

      Delete
  7. மு கோவில் டறுக்கமுன்னர் என்னவோ எனக்கென்ற கதையாய்ப்போயிட்டு!
    வடகிழக்கு இணைப்பென்பது
    அரசியலமைப்பு சட்டம் மாற்றப்பட்டு சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு நிகழவேண்டியவை!
    சம்மந்தன் ஹக்கீமோடு பேசி செய்ய முடியுமென்றால் நல்லவிடயம்தான்!மு கோவில் ஹக்கீமின் இருப்பே கேள்விக்கறியாக இருக்க பிரதேசவாத்த்தில் ஊரிப்போய் நாளுக்கு நாள் பலம் குன்றும் முஸ்லிம்களை சிங்கள இனவாத சக்திகள் உரமிட்டு வடகிழக்கு என்றும் வடக்காகவும் கிழக்காகவும் இருக்கத்தான் வழிசெய்வர்!
    வடகுழக்கு இணைப்பு சாத்தியம் இனங்களுக்கிடையான சகவாழ்வு சிலவருடங்களாவது நிகழ்ந்திருந்தால் மட்டுமே! இலங கையைப்பொருத்தவரை குதிரைக்கொம்புதான்!
    சம்மந்தன் போன்றவர்கள் இங்கு பதிவிடும் குறுகிய மனங்கொண்டவர்களின் முதுகில் கடந்தகாலங்கள் போன்றே இன்னும் பலநூறுவருடங்கள் சவாரி செய்யலாம்அவ்வளவுதான் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களைத்தாண்டி எதுவுமே நிகழாது நிகழாது,

    ReplyDelete
  8. @kaaamaran .....
    இந்தியாவில் காஷ்மீர் அல்ல, காஷ்மீருக்குள் இந்தியா, என்பதுதான் உண்மை.
    வரலாறு அறிந்து பேசும் தம்பி.
    இந்தியாவால் அத்துமீறி பிடிக்கப்பட்ட நாடே காஷ்மீர் . அது ஒரு தனி நாடு. முஸ்லீம் மன்னர்கள் வரலாறு நெடுகிலும் ஆண்டு வந்த இடம்தான் காஷ்மீர்.
    உங்கட புத்தியே இப்டித்தாண்டா ..............,
    இருக்கிற அதிகாரத்தை வெச்சி வட மாகாணத்தை ஆட்சி செய்து இப்ப இருக்கிற மக்களின் பிரச்சினையை தீர்க்க பாருங்க. அத செய்ய வக்கில்லை, வடக்கையும் கிழக்கையும் இணைக்க வந்துட்டாங்க.
    இப்ப மக்களுக்கு தேவ இருக்க வீடும் தின்ன சாப்ப்படும் தான், அத குடுங்கோ.

    ReplyDelete
    Replies
    1. @Abdul ஐய்யய்யோ.
      என்னங்க கஷ்மீர முஸ்லீம்மன்னர்கள் ஆண்டார்களா?
      எங்களை குழந்தை பிள்ளை என்று நினைத்தாயா?
      கஷ்மீரின் மன்னர் ஹரீ சிங்க் (அஇந்து மன்னர்)கஷ்மீர் இந்தியப்பிரதேசம் என்று எழுதிககொடுத்துதான் கஷ்மீர் இந்தியாவிடம்சென்றது.யாருக்கு நீ வரலாறு பாடம் எடுக்குறாய்.
      சரி உம்கருத்தை வைத்து பார்த்தால் வடக்கில் நாம் ஆண்ட யாழ்பாண ராட்சியம் பற்றி 7ம் தரவரலாற்று பாடத்திலிருந்து O/l வரை கற்பிக்கபடுகிறது.நீர் பாடசாலை சென்றிருந்தால் படித்திருப்பீர்.
      முஸ்லீம்கள் தாம் ஆண்டதால் கஷ்மீர் போராட்டம் நியயம் என்கிறீர்(கஷ்மீர் இறுதி மன்னன் இந்து ஹரீ சிங் என்பதே உண்மை) நாம் வடக்கிலும் கிழக்கிலும் ஆண்டவர்கள் (கிழக்கில் உலகநாச்சி ,குளகொட்டன் ) நாம்போராடினால் உமக்கு ஏன் வலிக்குது.
      கஷ்மீருக்கும் இப்ப தேவை தின்ன சாப்பாடும்,வீடும் தனே தம்பி அப்ப இந்திய அரசுடன் ஒத்து போய் அதை பெறலாமே?
      உமது கட்டுகதைகளையும் வெட்டி நியாயங்களையும் ஏமாந்தவன் எவனிடமும் போய் சொல்லும்.

      Delete
    2. @abdul
      In the first half of the 1st millennium, the Kashmir region became an important centre of Hinduism and later of Buddhism; later in the ninth century, Shaivism arose. Islamization in Kashmir took place during 13th to 15th century and led to the eventual decline of the Kashmir Shaivism in Kashmir. However, the achievements of the previous civilizations were not lost, but were to a great extent absorbed by the new Islamic polity and culture which gave rise to Kashmir Sufi Mysticism.
      ஐப்னா முஸ்லீம் இதனை வெளியிடாது ஆனால் உண்மை இதுதான்.உண்மையை மறைக்கலாம் அழிக்க முடியாது.

      Delete

Powered by Blogger.