தேசிய வைத்தியசாலையில் இனம்தெரியாத சடலங்கள் - புதியயவற்றை பொறுப்பேற்க மறுப்பு
பொலிஸாரால் கையளிக்கப்படுகின்ற இனம் தெரியாத சடலங்களை பொறுப்பேற்பதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே வைத்தியசாலையில் இனம்தெரியாத சடலங்கள் அதிகமாக காணப்படுவதாகவும் இதனால் மேலும் சடலங்களை வைப்பதற்கு வைத்தியசாலையில் இடம் பற்றாக்குறை நிலவுவதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவிக்கின்றது.
வைத்தியசாலையில் சடலங்கள் அதிகமாக காணப்படுவதால் துர்நாற்றம் அடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் சுகாதார பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அணில் ஜெயசிங்ஹ தெரிவித்துள்ளார்.
எனவே அடையாளம் தெரியாத சடலங்களை பொறுப்பேற்பதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம் எனவும் குறிப்பிட்டார்.
Post a Comment