இரவு களியாட்ட விடுதி பிரச்சினை - முழு விசாரணைக்கு ஜனாதிபதி ஆலோசனை
கொழும்பு - யூனியன் பிளேசிலுள்ள இரவு நேர களியாட்ட விடுதியொன்றில் இடம்பெற்றதாக கூறப்படும் பிரச்சினை தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதியால் பாதுகாப்புத் தரப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக, பிரதியமைச்சர் கரு பரணவிதாரன குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளதா இல்லையா என்றும், இந்த பிரச்சினையில் மைத்திரிபால சிறிசேனவின் புதல்வரான தஷம் சிறிசேனவின் பெயர் உள்ளடக்கப்பட்டும் ஊடகங்களில் செய்திகள் வௌியாகியுள்ள நிலையில், ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளதாக, பிரதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதேவேளை, இதற்கு மேலதிகமாக ஜனாதிபதி விசாரணைப் பிரிவினராலும் இது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த விசாரணைகளின் பெறுபேற்றை அடிப்படையாகக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், பிரதியமைச்சர் கரு பரணவிதாரன நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.
புடிச்சி உள்ள போட்டு காயடிக்கோணும். அப்பாவின் பேரைக் கெடுக்க வந்த பிள்ளைகள்.இப்படித்தான் ராஜபக்ஷ என்ற ஒரு நல்லவரின் பெயர் கெட்டுப்போனது ! அவரின் பிள்ளைகளாலும் தம்பிகளாலும் ?
ReplyDeleteஅப்பாவும் முன்னர் தெருச் சண்டியனோ தெரியாது.
ReplyDelete