'பொலிஸ்மா அதிபரும், விரைவில் பதவி விலகவேண்டும்'
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் டில்ருக்ஷி டயஸ் விக்கிமரசிங்கவின் இராஜினாமாவை மஹிந்த அணி வரவேற்றுள்ளது.
இதேபோல், பொலிஸ்மா அதிபரும் விரைவில் பதவி விலகவேண்டும் என்றும் மஹிந்த அணி வலியுறுத்தியுள்ளதாகவும் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு பணிப்பாளரின் பதவி விலகல் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.
"இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, எவ்.சி.ஐ.டி. உள்ளிட்ட சில நிறுவனங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயற்படுகின்றன என்று பலமுறை சுட்டிக்காட்டிருந்தோம் அதனை தற்போது ஜனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளார்.
நீண்ட நாட்கள் சென்ற பின்னராவது, பதவிதுறக்கும் முடிவை இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் எடுத்ததை முன்னிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.
அதேபோல், சட்டத்தை நிலைநாட்டுவதாகப் பொய் கூறிவரும் பொலிஸ்மா அதிபரும் விரைவில் தனது பதவியை இராஜினாமா செய்யவேண்டும் எனவும் உதய கம்மன்பில தெரிவித்தார்.
Police pathi illa aswunata pasuwa udaya gammanpilage pawla police pathi karamu.
ReplyDelete