லசந்தவின் கொலை, நீதிமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டவை..!
துப்பாக்கி தொடர்பிலான மிக முக்கிய சிக்கலொன்றுக்குள் தான் சிக்கிக்கொண்டுள்ளதாக முன்னாள் சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை தானே கொலை செய்ததாக கூறி தற்கொலை செய்துகொண்ட இராணுவ புலனாய்வு வீரர் ஜயமான்ன தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குற்றப்புலனாய்வு பிரிவு முன்னெடுத்துள்ள விசாரணைகளிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளதாக புலனாய்வு பிரிவின் சிறப்பு விசாரணை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் கிரிஷாந்த சில்வா கல்கிசை பிரதான நீதிவான் மொஹமட் சஹாப்தீனுக்கு நேற்று -28- அறிவித்தார்.
லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட பிரதான காரணம் மிக் விமான கொள்வனவு தொடர்பிலான மோசடிகளே அம்பலப்படுத்தியமையேயாகும் என விசாரணைகளில் உறுதியாகியுள்ளதாகவும் அவர் நீதிவானுக்கு அறிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
லசந்த விக்ரமதுங்கவை தானே கொலை செய்ததாக கூறி தற்கொலை செய்துகொண்ட ஓய்வு பெற்ற இராணுவ புலனாய்வு அதிகாரியான ஜயமான்ன தொடர்பில் நாம் விசாரணைகளை முன்னெடுத்தோம். அவர் தற்கொலை செய்துகொள்ள முன்னர் அதாவது கடந்த 10 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் வீட்டிலிருந்து வெளியேறிச் சென்று வெளியே தங்கியிருந்துள்ளார்.
குறிப்பாக கடந்த 12 ஆம் திகதி கட்டுகுறுந்த இராணுவ முகாமுக்கு அவர் சென்றுள்ளார். முகாமிலிருந்து திரும்பிய அவர் தனக்கு மிக நெருக்கமான சிலரிடம் தான் முகாமுக்கு சென்ற விடயத்தையும் அங்கு துப்பாக்கி ஒன்று தொடர்பிலான பிரச்சினை ஒன்றுக்குள் தான் வசமாக சிக்கிக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இவரால் எழுதப்பட்டதாக நம்பப்படும் கடிதத்தின் கையெழுத்து அவருடையதே என அவரது மகள் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கடிதத்தில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இந்த விவகாரத்தில் சந்தேக நபராக கைது செய்யப்பட்டுள்ள பிரேமாநந்த உடலாகமவை விடுவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இதில் பிரேமாநந்த உடலாகமவின் பெயரானது மிலிந்த உடலாகம என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு பிரிவில் பிரமேனாந்த உடலாகமவிற்கு மிலிந்த உதலாகம என்றே பெயர் சூட்டப்பட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் லசந்த விக்கிரமதுங்கவின் சாரதியான டயஸ் என்பவரை தற்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் பிரேமாநந்த உடலாகம கடத்திச் சென்றமை தடுத்து வைத்து அச்சுறுத்தியமை ஆகியன உறுதியாகியுள்ளன.
இதன்போது மிக் விமான மோசடி தொடர்பில் எழுதியதற்காக லசந்தவை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ கொலை செய்ததாக லசந்தவின் சாரதி டயஸ் என்பவர் பலரிடம் கூறியமைக்காகவே கடத்தப்பட்டு விசாரணை என்ற பேரில் உயிர் அச்சு றுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. எனி னும் உண்மையிலேயே லசந்தவின் கொலையானது மிக் விமான கொள்வனவு மோசடியை மையப்படுத்தியமையினா லேயே இடம் பெற்றுள்ளமை இதுவரை யிலான விசாரணைகளில் உறுதி செய்யப் பட்டுள்ளதாக நிஷாந்த சில்வா மன்றுக்கு அறிவித்தார்.
Post a Comment