மைத்திரி - ரணில் ஆட்சிக்கு வரமுன், வடக்கில் இதுபோன்ற மோசமான நிலை காணப்படவில்லை
1983 ம் ஆண்டில் இன்றுள்ளது போன்ற மோசமான பின்னணியிலே நாட்டின் பெரும் குழுப்ப நிலை உருவானது. அரசாங்கம் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறியுள்ளதாக ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
23/2 நிலையியற் மன்றத்தில் கேள்வி எழுப்பிய போதே அவர் இது குறித்து கருத்து வெளியிட்டார்.
கொக்குவில், கல்பிட்டி, மட்டக்குளி சம்பவங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பிய அவர் மேலும் கூறியதாவது,
வடக்கில் யாழ்ப்பாணம், கல்பிட்டி, சுன்னாகம் மட்டக்குளி ஆகிய பிரதேசங்களில் ஆயுதம், வாள் என்பன பயன்படுத்தி கொலை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. சட்டம் ஒழுங்கை செயற்படுத்துவதில் வீழ்ச்சி நிலை ஏற்பட்டுள்ளது.
கல்பிட்டியில் மீனவர்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்து வீதியில் இறங்கினர்.
இதன்போது ஏற்பட்ட மோதலில் 10ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
வாகனங்கள் படகுகள் தீ வைக்கப்பட்டன. பொலிஸாரினால் நிலைமையை கட்டுப்படுத்த முடியவில்லை.
23ம் திகதி சுன்னாகத்தில் இரு புலனாய்வு அதிகாரிகள் வெட்டித் தாக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்குளி பிரதேசத்தில் சட்டவிரோத ஆயுதக் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது. சட்டம் அமுல்படுத்துவதிலும், பாதுகாப்பை உறுதி செய்வதிலும் பொது மக்களினதும் பல்கலைக்கழக மாணவர்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் வழங்குவதில் பிரச்சினையும் அச்சுறுத்தலும் எழுந்துள்ளது.
1983 ம் ஆண்டிலும் இவ்வாறான பின்னணியில் தான் நாட்டில் பெரும் குழப்பம் வெடித்தது என்றார்.
விமல் வீரவங்ச (எம்.பி.)
சிலாவத்துறை கடற்படை முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஆவா குழு பாதுகாப்பு தரப்பை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
ஜனவரி 8 தேர்தலுக்கு முன்னர் வடக்கில் இவ்வாறான நிலைமை காணப்படவில்லை.
அதிகாரத்தை மாற்றி ஆவா குழுவுக்கு அதிகாரம் வழங்கியுள்ளனர் என்றார்.
வாசுதேவ நாணயக்கார எம்.பி.
பொலிஸார் பார்த்திருக்கையிலே கல்பிட்டியி-ல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
அவங்க தான் மொத்த மாக போட்டுத்தள்ளிக் கொண்டு இருந்தார்கள் அதனால சில்லர விடயங்கள் பெரிதாக தெரிய வில்லை..
ReplyDelete