Header Ads



கசாப்புக் கடையாக அலெப்போ மாறிவிட்டது - ஐ.நா.

சிரியாவில் உள்ள அலெப்போ நகரில் போராளிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலிருந்து காயம் அடைந்து பொதுமக்களை அப்புறப்படுத்தும் திட்டங்களை இன்று மட்டும் கைவிட வேண்டிய கட்டாயத்திற்கு ஐக்கிய நாடுகள் தள்ளப்பட்டுள்ளது.

பல குழுக்களின் உடன்பாடு இன்னும் தேவைப்படுகிறது என்று மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தை சேர்ந்த ஐ.நா அதிகாரியான டேவிட் ஸ்வான்சன் தெரிவித்துள்ளார். இது ஒரு கடினமான தருணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

அலெப்போ மீது ரஷ்யா மற்றும் சிரியா விமானங்கள் குண்டு வீச்சு தாக்குதல் நடத்துவதில் தற்காலிக நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், அதனை மீட்புப் பணிக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளலாம் என ஐ.நா நம்பியிருந்தது.

ஒரு கசாப்புக் கடையாக, அலெப்போ மாறிவிட்டதாக ஜெனீவாவில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் செயீத் ராத் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் குறிப்பிடக்கூடிய குற்ற சம்பவங்கள் சிரியாவில் இழைக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. மலேசியா போன்ற ஜனநாயகம் உள்ள ஒரு சில முஸ்ஸிம் நாடுகள் தவிர மிகுதி எல்லாம் கசாப்பு கடை தானே சார்?

    எங்கும் மாறி மாறி யுத்தங்கள், ராணுவ புரட்சிகள், ஜனநாயகம் அற்ற மன்னர் ஆட்சிகள்.

    கடந்த 50 வருடங்களில் இந்த 3ம் இல்லாத ஒரு முஸ்லிம் நாடு (மலேசியா தவிர) யாராவது சொல்ல முடியுமா?

    ReplyDelete
  2. அப்படின்னா, 50 வருடங்களுக்கு முன்னர் இந்த நாடுகள் அமைதியாகத்தான் இருந்தன என்கிறீர்கள் ? அதாவது எப்போது இஸ்ரேல் உருவாக்கப்பட்டதோ , ஐநா சபை உருவாக்கப்பட்டதோ, அமெரிக்கா மத்திய கிழக்குநாடுகளின் விவகாரங்களில் தலையிட ஆரம்பித்ததோ , அவற்றின் எண்ணெய்யை சூறையாட தொடங்கியதோ அத்துடன் மத்திய கிழக்கின் அமைதி பறந்தது . ஏன் சில வருடங்களுக்கு முன்னர் சிரியா , லிபியா , இராக், யெமன் போன்ற நாடுகள் அமைதியாக இருக்கவில்லையா ? அந்த நாட்டு மக்களிடம் கேட்டால் இது தெறியவரும், எவ்வளவு அமைதியாக அவர்கள் வாழ்ந்தார்கள் என்று. என்ன anjan துவேசத்தில் மூழ்கி ஊறி விட்டீர்கள் போலும் ... இருக்கட்டும் இருக்கட்டும் ....

    ReplyDelete

Powered by Blogger.