முஸ்லிம் சமூகத்தை, கணக்கெடுப்பதாகத் தெரியவில்லை - றிசாத் றீட்டாவிடம் முறையீடு
புதிய அரசியலமைப்பு, தேர்தல் முறைமை மாற்றம் உட்பட எந்தவொரு அரசியல் செயற்பாட்டிலும் முஸ்லிம் சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படாதவாறும் அவர்களின் அபிலாஷைகளும் கோரிக்கைகளும் உள்வாங்கப்படுவதை உறுதி செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியாவிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் வணிக்கத்துறை அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறுபான்மை இன விவகாரங்களை ஆராய்வதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியாவுக்கும் அகில இலங்கை மக்மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியூர்தீன் தலைமையிலான முக்கியஸ்தர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று புதன்கிழமை இடம்பெற்றது.
இச்சந்திப்பு குறித்து அமைச்சர் ரிஷாட் பதியூர்தீன் கருத்து வெளியிடுகையில்,
இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள், தமிழர்களுடனும் சிங்களவர்களுடனும் பரஸ்பரம் இணைந்து சுமூகமாக வாழ்கின்ற போதும் அவர்கள் தொடர்தேர்ச்சியாக துன்பங்களையே அனுபவித்து வருகின்றனர்.
கடந்த கால யுத்தத்தில் முஸ்லிம்கள் நேரடியாக சம்பந்தப்படாத போதும் அதனால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
1990 ஆம் ஆண்டு வடக்கிலே வாழ்ந்த முஸ்லிம்கள் துரத்தப்பட்டு இன்னும் அகதி முகாம்களில் வாழும் கொடுமையே நிலவுகின்றது.
இந்தக் காலப்பகுதியில் இவர்கள் வாழ்ந்த பூர்வீக குடியிருப்புக் காணிகள், விவசாயக்காணிகள் கபளீகரம் செய்யப்பட்டிருக்கின்றன. மேலும் சில காணிகள் வர்த்தமானிப் பிரகடனம் மூலம் அரசினால் சுவீகரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மீள்குடியேறுவதற்கு பெருந்தடை நிலவுகின்றது.
சர்வதேசமோ, அரச சார்பற்ற நிறுவனங்களோ வடக்கு முஸ்லிம் சமூகத்தை எள்ளளவும் கணக்கெடுப்பதாகத் தெரியவில்லை.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென அழுத்தம் கொடுத்துவரும் சர்வதேசம், முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலோ, அவர்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பிலோ அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை.
நீண்டகாலமாக இடம்பெயர்ந்து வாழும் இந்த மக்களை குடியேற்றுவதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் அரசினால் உருவாக்கப்பட்ட விஷேட செயலணியின் செயற்பாட்டுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலேயுள்ள வடமாகாண சபை தடை போடுகின்றது.
இந்த மாகாண சபை வடக்கு முஸ்லிம்களை மாற்றாந்தாய் மனப்பாங்குடனேயே நடாத்துகின்றது. அவர்கள் உதவுகின்றார்களுமில்லை, உதவி செய்பவர்களை அனுமதிக்கின்றார்களுமில்லை. நீங்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு எங்களின் மனக்குறைகளையும் கவலைகளையும் எடுத்துரைக்க வேண்டும்.
இன்றைய முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை விலாவாரியாக எடுத்துரைத்திருக்கிறார்.
ReplyDeleteபாராட்டுக்கள்.
இவர் ரீட்டாவிடம் சொன்ன விடயங்கள் சரிதான்.
ReplyDeleteஆனால், ஒரு நாட்டின் அமைச்சர் தனது ஜனாதிபதி/பிரதமர் யிடம் சொல்லி நியாயம் கேட்க வேண்டியதை 3ம் தரப்பினரிடம் சொல்லவேண்டிய நிலமை.
ஏன் இந்த நிலமை?
எல்லா அமைச்சர்களும் இப்படி அதிகாரமில்லாத எடுபிடி தானோ?. நான் நினைத்தேன் ராஜபக்ச காலத்தில் மட்டும் தான் இப்படி என்று.
அப்படியாயின் வடக்கு
Deleteஅரசியல் வாதிகள்
இந்தியா, நோர்வே, இங்குவரும் ஐ.நா பிரதினிதிகள், தன்.தொண்டு நிறுவன பிரதினிதிகள் என்று 3ஆம் 6ஆம் 10ம் தரப்பு வரைக்கும் அதிகாரமிருந்தும் எடுபிடியாக இருக்கும் நிலமை ஏனோ???
@mohamed, நீங்கள் என்ன கோமா யில் இன்று தான் முழித்தீழ்களா?
DeleteTNA தலைவர்கள் ஒருபோதும் உங்கள் தலைவர்கள் மாதிரி பணம்/பதவிக்காக ஆட்சிக்கு வரும் எல்லா அரசாங்கதுக்கும் முதுகு சொறிந்து கொண்டிருப்பதில்லை.
@Mohamed imran வடக்கு அரசியல்வாதிகள் அரசில் அங்கம்வகிக்கவில்லை அங்கம் வகிக்கும் அரசியல் வாதிகள் சர்வதேசதிடம் செல்வதில்லை.
DeleteThey get salary, perks, Luxury cars from government and they criticise SL to outsiders.
Delete@ ajan, kumar கருத்தை திசைமாற்றி பிதற்றாதீர்கள், 2நாட்கள் முன்னர் விக்கி ஐயா தெரிவித்த கருத்து இலங்,அரசிடமா ? அல்லது 3 ஆம் தரப்பா?
Deleteஅவர் வடக்கு அரசியல்வாதி இல்லையா?
முஸ்லீம் அரசியல் வாதிகள் எந்த ஆட்சியாளருடனும் இணைந்தது சமூகத்துக்காகவும் சேர்த்துதான்.
ஏனெனில் முஸ்லீம்கள் அரசிடம் எதிர்பார்பது வாழ்வுரிமை சுதந்திரம், அது மறுக்கப்படின் இறுதி ஜனாதிபதித் தேர்தலே சாட்சி.
சிறுபானமயான நாம் அடிமையில்லை, வாழ்வுரிமை மறுக்கப்பட்டால் அப்போது எமது எதிர்ப்புகள் வெளிவந்தன...
அதற்காக 2மாகாணம்தா! ராணுவத்தை திருப்பியளை! சுயஆட்சி தா! என்பது ???
@Mohamed Imran முஸ்லும்களுக்கு சுயாட்சி கோர எந்த முகந்திரமும் இல்லை.ஆனால் தாமிழர்தேசம் வலிந்து சிறுபான்மை ஆக்கப்பட்ட தேசிய இனம்.தமிழரையும் முஸ்லீமையும்ஒப்பிட முடியாது.
Deleteசுயாட்சி முஸ்லீம்களுக்கு சம்மந்தமற்ற ஒரு கருத்து, முஸ்லீம்கள் சுதந்திர வாழ்வையே கோருவர்.
Deleteஅதேபோல் தம்மை யார் ஆட்சி செய்யவேண்டுமெண்ற முடிவுசெய்யும் உரிமை முஸ்லீம்களினதே.
முஸ்லீம்களுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை எனும் நீர் எந்த அதிகாரத்துடன் எமது சுதந்திரம், சொத்து, உயிர், வாழ்விடம் என்பவற்றை பறித்தீர்???
பயங்கரவாத தடைச்சட்டம் வேண்டாமென்பீர்,
புலிகள் செய்த அனீதியை சொன்னால் 'அது அப்பவே தலைவரிடம் கேட்டிருக்கலாமே' என சொந்தக்கருத்திலேயே முறண்படுவீர்.
தீர்வுவேண்டாமென்பீர் தமிழர் கஷ்டப்பட்டு தீர்வு தேடும்போதெல்லாம் ஓடிவந்து குழப்புவீர்.குழப்பவாதிகள்.முஸ்லீம்கள் தாம் யுத்தத்துடன் தோடர்புபடவில்லை என்று நழுவமுடியாது ஜீகாத் எனும் கூலிபடையை ஆரம்பித்து தமிழர் கணிகளையும் சொத்துகளையும்அபகரித்தீர்கள்.நெருப்புடன் விளையாடிபார்க்க நினைத்தது முஸ்லீம்களின் முட்டாள்த்தனம்.
Deleteஓஹோ, ஓடிவந்து குளப்ப நீர் சொல்லும்தீர்வு எப்போது கிட்டியதோ? அப்படியாயின் கையாலாகா தமிழ் அர,வாதிகள் திறமையை காட்டி குளப்பத்தை சீர்செய்திருக்கலாமே. சரி அது ஒரு புறம்....
Deleteமுஸ்லீம் படை சொத்துகளை கொள்ளயிட்டதாக சொன்னீர், eros, ltte, tello, epdp, eprlf ஆகிய கூட்டுக் கூலிப்படைகள் எத்தனயாம் ஆண்டில் முளைவிட்டனர்? ஜிஹாத் அணி எப்போது தோடங்கப்பட்டது?
வீடுகள், கடைகள், போதாமல் காத்தான்குடி மக்கள் வங்கி (இது திருட்டல்ல பட்டப்பகலில் மக்களின்கண்முன்னே கொள்ளையிடப்பட்டது) என உங்கள் திருட்டு, கொள்ளை, கடத்தல், கொலை சாதனைகள் வானை தொட்டது...
நெருப்புதான் ; ஆனால் தண்ணீர் படும் வரைக்குமே, இல,இராணுவம் வந்தது நெருப்பு புஷ்ஷ்ஷ்.
முஸ்லீம்கள் தமிழர் போராட்டதை காட்டி கோடுத்தனர்.அதனுடன் நிற்காது தமிழர் இணுவ இரகசியங்களை கசியவிட்டூ காட்டி கொடுத்து காசு சம்பாதித்தனர்.
Deleteஜீகாத் செய்தால் அதற்கும் முஸ்லீம்களுக்கு சம்மந்தமில்லை அவர்கள் தனிபட்ட குழு என்று நழுவுவது.தமிழ்குழுகள் செய்தவற்றுக்கு ஒவ்வேருதமிழனும் மன்னிப்பு கேக்கவேண்டுமென்பது.
Deleteகுமார்; முஸ்லீம்கள் தமிழர் போராட்டத்தை காட்டிக் கொடுத்தனர் என்பது உன்மை எனில் கருணா, பிள்ளையான் என்போராவது முஸ்லீமாய் இருந்திருக்கணும்.
Deleteஇது உங்கள் கற்பனை,
5ஆதாரமான கருத்தை கூறுங்கள்?
ஜிஹாத்குளு தவறு செய்திருப்பின்
அதை செய்தவரே தண்டணைக்குரியவர், தமிழர்களுக்கும் அதில் சமநீதியே.
அதே தமிழ் குளு செய்ததை அறிந்த நீர் ஏன் ஆதரவு வார்தை நல்குகிறீர்?
நான் கருத்துரைப்பது குமார், குமாரின் கருத்தை மட்டும் ஆதரிப்பவர்களையே, தமிழ் குளுக்கள் செய்தது தவறெனில்
அதை ஏற்கும் தமிழருக்கு இங்கு நான் கருத்துரைக்கவில்லை.
நீர் எங்கு கருத்து வெளியிடுகயிலும் முஸ்லீம் எதிர்ப்பு கொள்கயுடன் பிணைந்துள்ளீர், இப்போக்கிலுள்ள தமிழ் அரசியல் வாதிகளை எதைவைத்து முஸ்லீம்கள் நம்பலாம்???
இனவாத விக்கி, கிங்ஸ்டன் நகரத்திற்குப் போய், இலங்கை இராணுவத்தைப் பற்றி இல்லாத பொல்லாதது எல்லாம் உளறியிருக்குது.
ReplyDeleteஇலங்கை இராணுவத்தைப் பற்றிக் கதைக்க வேண்டுமென்றால், மைத்திரியிடம் வெளியிடலாமே.