Header Ads



முஸ்லிம் பெண்களுக்கு, அநீதி இழைக்கப்பட்டுள்ளது - மோடி

அரசியல் கட்சிகளின் வாக்கு வங்கி அரசியல் காரணமாக முஸ்லிம் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி பேசினார்.

உ.பி., மாநிலம் மெஹோபா என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்த தீபாவளியில், பாதுகாப்பு படையினருக்கு மக்கள் வாழ்த்து கூற வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்

துயரத்தில் விவசாயிகள்:
குஜராத்தில் உள்ள பந்தல்கண்டை சேர்ந்த விவசாயிகளிடம், சொந்த ஊர்பற்றி கேட்பேன். அவர்கள் உ.பி., என்பார்கள் இதன் பிறகு அவர்களிடம் நான் கேட்க மாட்டேன்.இங்குள்ள விவசாயிகள் அநீதியை சந்திக்கின்றனர். இங்குள்ள நிலங்கள் தங்கம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. ஆனால், இங்குள்ள விளைநிலங்களுக்கு போதிய தண்ணீர் இல்லை.நீண்ட போராட்டத்திற்கு பிறகு குஜராத்தில் தற்போது தண்ணீர் பிரச்னை இல்லை.. விவசாயிகளுக்கு போதிய தண்ணீர் அளித்தால், அவர்கள் பல சாதனைகள் செய்வார்கள். பந்தல்கண்டில் ஏராளமான இயற்கை வளங்கள் உள்ளன. இங்குள்ள வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. பந்தல்கண்டில், தங்களது நலத்தை பற்றி சிந்திக்கும் மக்கள் உள்ளனர். அவர்கள் மக்கள் நலன் பற்றி சந்திப்பது இல்லை. பந்தல்கண்ட்டில் பல பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த பணியும் நடைபெறவில்லை ம.பி.,யில் உள்ள பந்தல்கண்டிற்கும், உ.பி.,யில் உள்ள பந்தல்கண்டிற்கும் ஒரே அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ம.பி., பந்தல்கண்ட் வளர்ச்சி பெற்ற அளவுக்கு. இங்கு வளர்ச்சியில்லை. பந்தல்கண்ட் மக்களின் குரல் நாட்டு மக்களின் குரலாக உள்ளது. ம.பி.,யில் சொட்டுநீர் பாசன திட்டத்தை பாருங்கள். இது அங்குள்ள விவசாயிகள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், உபி., விவசாயிகளுக்கு மகிழ்ச்சியில்லை.

சொந்த நலன்:
உ.பி.,யின் எதிர்காலத்தை மாற்ற சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். உ.பி., அனைத்து அரசியல் விளையாட்டுகளையும் பார்த்துள்ளது. இதற்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது. உ.பி.,யை வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற்ற வேண்டும். சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்தன., அவர்களது நிலை உயர்ந்ததே தவிர மக்கள் நிலை உயரவில்லை. சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் மாறி மாறி அதிகாரத்திற்காக போராடுகின்றன. இவர்களது விளையாட்டில் மக்கள் புறக்கணிக்கபடுகின்றனர்.சமாஜ்வாதியும் பகுஜன் சமாஷம் சொந்த நலனுக்காக உ.பி.,யை கொள்ளையடிக்கின்றன. யார் ஆட்சிக்கு வந்தாலும் மற்றவர் மீது நடவடிக்கை எடுப்பதில்லை.இரு கட்சிகளும் மாநிலத்தை சீரழித்துள்ளன. இதனால், அவர்களது ஆட்சியில் மாநிலம் வளர்ச்சியை எட்ட முடியாது.

அனுமதி கூடாது:
நாட்டிற்காக உயர் தியாகம் செய்த நரேஷ் குமார் பாலுக்கு எனது அஞ்சலியை தெரிவித்து கொள்கின்றேன்.என்னை உ.பி., உருவாக்கியது. நான் பட்ட கடனை அடைக்க இங்கு வந்துள்ளேன்உ.பி., மாநிலம் பல பிரதமர்களை அளித்துள்ளது. நானும் இங்கிருந்து தேர்வாகியுள்ளேன். மற்ற பிரதமர்களைவிட அதிகமாக மாநிலத்திற்கு உழைக்க உள்ளேன். மாநிலத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தும் அரசு அமைக்க மக்கள் வாய்ப்பு தர வேண்டும். உ.பி., நிலம் தனது தாய். நமது தாய் ஏமாற இனிமேலும் அனுமதிக்க கூடாது. எனது இளைய நண்பர்கள் உங்களது எதிர்காலத்தை பற்றி சந்திக்க வேண்டும். உங்களுக்கான நேரம் வரும் போது, வளர்ச்சிக்கு எது நல்லது என சிந்திக்க வேண்டும்.

சம உரிமை:
டிரிப்பிள் தலாக் விவகாரத்தை அரசியலாக்கக்கூடாது. பெண்களுக்கு சம உரிமை அளிப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும். முஸ்லிம் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும். டிவி விவாதத்தில் கலந்து கொள்பவர்கள். பெண்களின் உரிமையை, முஸ்லிம் இந்து பிரச்னையாக மாற்றக்கூடாது. 21ம் நூற்றாண்டில், வாங்கு வங்கி அரசியல் காரணமாக, சில அரசியல் கட்சிகள் முஸ்லிம் பெண்களுக்கு அநீதி இழைத்துள்ளன. இம்முறை உ.பி., மக்கள் மாநிலத்திற்காக ஓட்டு போட வேண்டும். இதனை மக்கள் முடிவு செய்வார்கள் என்பது டில்லிக்கு தெரியும் எனக்கூறினார்.

11 comments:

  1. சொந்த பொண்டாட்டியை ஒதுக்கி வைத்துள்ள இவர் தமிழ் நாட்டுக்கு தண்ணீர் விடுவது பற்றி கதைக்காத இவர் இப்படி கதைப்பது ஆடு நனைகிறதே என ஓநாய் கவலைப்பட்டது போல உள்ளது.

    ReplyDelete
  2. ஆடு நனையிது என்று ஓநாய் அழுதிச்சாம்

    ReplyDelete


  3. புனே,

    மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தை சேர்ந்த 18-வயது இளம்பெண் ’மும்முறை தலாக்’ முறைக்கு தடை விதிக்க பிரதமர் மோடியின் உதவியை நாடிஉள்ளார். இந்த ’மும்முறை தலாக்’ முறையை முடிவுக்கு கொண்டுவர பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

    இஸ்லாமிய வழக்கப்படி "தலாக்' என்ற வார்த்தையை பிரயோகித்து விவகாரத்து செய்து கொள்ளும் நடைமுறை காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த முறையால் பெண்களுக்கு பாரபட்சமான நீதி வழங்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அபிடவிட் தாக்கல் செய்த மத்திய அரசும் இம்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தது. ’மும்முறை தலாக்’ விவகாரம் பெண்களுக்கு எதிரானது என்பது மத்திய அரசின் வாதமாக இருந்து வருகிறது.

    இதற்கிடையே நாட்டில் அனைத்து குடிமக்களுக்கும் பொருந்தக் கூடிய ’பொது சிவில் சட்டம்’ தொடர்பான கருத்துகளை அறிவதற்காக சட்ட ஆணையம் கேள்வித்தாள் தயாரித்தது. இதற்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன... இதனையடுத்து இஸ்லாமிய சமூகத்தில் ’மும்முறை தலாக்’ முறைக்கு ஆதரவாகவும், எதிராகவும் தனித்தனியாக கையெழுத்து சேகரிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் ’மும்முறை தலாக்’ முறைக்கு தடை விதிக்க பிரதமர் மோடியின் உதவியை நாடிஉள்ளார். இந்த ’மும்முறை தலாக்’ முறையை முடிவுக்கு கொண்டுவர பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

    புனேவை சேர்ந்த அர்ஷியாவிற்கு 16 வயதில் அப்பகுதியை சேர்ந்த வசதியான காய்கறி வியாபாரி முகமது காசிம் பக்வானுடன் திருமணம் முடிந்து உள்ளது. இவர்களுடைய திருமண வாழ்வானது 2 வருடங்களில் முடிவுக்கு வந்தது. முகமது காசிம் மூன்று முறை தலாக் என்று ‘பேப்பரில்’ எழுதிக் கொடுத்து உறவை முறித்துக் கொண்டார். சிறுமியாக இருந்த அர்ஷியா கணவரிடம் பல முறை போராடியும், நியாயம் கிடைக்கவில்லை. முகமது காசிம் என்னுடைய இதயத்தில் உனக்கு இடம் கிடையாது என்று கூறிஉள்ளார். 8 மாத குழந்தையுடன் சிறுமி அர்ஷியா வீட்டைவிட்டு வெளியே அனுப்பட்டு உள்ளார்.

    அர்ஷியா பேசுகையில் ” மும்முறை தலாக் முறையானது என்னைப் போன்று எண்ணற்ற பெண்களின் வாழ்க்கையை அழித்துவிட்டது, என்னைப் போன்று பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவிசெய்யும் விதமாக இம்முறைக்கு தடைவிதியுங்கள் என்று பிரதமர் மோடியை வலியுறுத்துகின்றேன்,” என்று கூறிஉள்ளார். அர்ஷியா தன்னுடைய கணவரிடம் இருந்து தலாக் நோட்டீஸ் பெற்று உள்ளார். ஆனால் அதனை ஏற்றுக் கொள்ளப்போவது கிடையாது என்று கூறிஉள்ளார். இதற்கு எதிராக குடும்பநல கோர்ட்டிற்கு செல்ல முடிவு எடுத்து உள்ளதாக கூறிஉள்ளார்.

    தன்னுடைய கல்வியை தொடரவேண்டும் என்று கூறிய அர்ஷியா, “எனக்கு திருமணம் முடிந்த பின்னரும் படிப்பை தொடர அனுமதிப்போம் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் வாக்களித்தப்படி அவர்கள் செயல்படவில்லை. எனக்கு திருமணம் முடிந்தபோது 11 வகுப்பை முடித்தேன். இப்போது என்னுடைய படிப்பை நான் தொடரவேண்டும், என்னுடைய சொந்த காலில் நிற்கவேண்டும்,” என்று கூறிஉள்ளார். அவருடைய தந்தை நிஸ்ஸார் பக்வான் பேசுகையில், “பொது சிவில் சட்டத்தை கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    என்னுடைய மகளைபோன்று இனியாரும் பாதிக்கப்பட கூடாது. நான் ஒரு ஏழை காய்கறி வியாபாரி, என்னுடைய மகளை படிக்க வைக்காமல் திருமணம் செய்துவைத்து மிகப்பெரிய முட்டாள்தனத்தை செய்துவிட்டேன்,” என்று கூறிஉள்ளார்.

    ReplyDelete
  4. போடா பொண்டாட்டிய இன்னொருவனுக்கு கொடுத்த நாயே,இழானுக்கு அடிப்பதை விட இவனுக்கு வாக்குப் போட்ட நாய்களுக்கு செருப்பால அடிக்க வேண்டும்

    ReplyDelete
  5. முதலில் யசொதாபென் என்கிற பெண்ணுக்கு நீதி கிடைக்க வழி செய்வாரா மோடி. 1968ம் ஆண்டில் இருந்து மோடி என்னும் கேடியால் அநீதிக்கு உள்ளாக்கப் பட்டு வஞ்சிக்கப் பட்டுள்ளார். அதை பார்த்து முடித்து விட்டு இஸ்லாமிய பெண்களுக்கு நீதி பெற்றுத் தரட்டும்

    ReplyDelete
  6. (1) முஸ்லிம்கள் மோடியின் பெயரை கேட்டாலே அலரி அடிப்பதன் காரணம் என்ன?

    (2) மோடி அண்மையில் இலங்கைக்கு விஐயம் செய்தார். அப்போ நேரிடையாக கொழும்பிலே யாழ்ப்பாணத்திலுள்ள உங்கள் எதிர்ப்பை காட்டாமல், பின்னர் ஒழிந்திருந்து இப்படி ஏன் கல்லெறிகின்றீர்கள்?

    ReplyDelete
  7. Yes modi u first help ur wife.

    ReplyDelete
  8. Ajan loosa gost evil ku yaru kuthan payam illai. Aduththathu manithankku ethirahathan arppattamellam.

    ReplyDelete
  9. @Ajan, மோடியின் பெயரை கேட்டால் நீங்கள் சொம்பு தூக்குவதன் மர்மம் என்ன? உங்களுக்கு அநியாயம் செய்ததில் முதல் பங்கு யாருடையது? இலங்கை அரசா? சிங்கள மக்களா? அல்லது முஸ்லிம்களா? எருமை மாடே, நீ சொம்பு தூக்கும் இந்திய அரசுதான். வைகோ சவால் விட்டானே, பாஜக அரசு வந்தால் ஈழம் நிச்சயம்ன்னு. எங்க வைகோ? கொய்யால உன் மத வெறிய தீர்க்க நாங்க ஊறுகாயா?

    ReplyDelete
  10. @kumar, இந்த பிணக்கு முஸ்லிம் விவாகங்களில் மட்டும் தான் இருக்கிறதா? அப்போ நீதிமன்றங்களில் இந்து மத பெண்களின் விவாக விவாகரத்து வழக்கு இல்லையா? முஸ்லிம்களாவது பிடிக்கலைன்னா தலாக் சொல்லி அவளுக்கு விடுதலை தருகிறான். ஆனா பத்தாயிரம் ரூபா சீதனம் கொடுக்காததுகேல்லாம் சமையலறையில் போட்டு கொளுத்தும் வழக்குகள் எத்தனை இருக்கிறது இந்து சமூகத்தில். அதெல்லாம் பார்த்து முடித்தாகி விட்டதா?

    ReplyDelete

Powered by Blogger.