Header Ads



அலெப்போ மீது, ரஷ்யா கொலை வெறித்தாக்குதல்


சிரியாவின் அலெப்போ நகர கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு பகுதி மீது ரஷ்ய போர் விமானங்கள் மீண்டும் உக்கிர தாக்குதல்களை ஆரம்பித்துள்ளன. பல தினங்களில் இது மோசமான தாக்குதல்களாக இருப்பதாக செயற்பாட்டாளர்கள் விபரித்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டிருக்கும் புதிய தாக்குதல்களில் சிறுவர்கள் உட்பட குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சிரிய அரசு அறிவித்த, கிழக்கு அலெப்போவில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கான யுத்த நிறுத்தம் முடிவடைந்த நிலையிலேயே அங்கு மீண்டும் குண்டு மழை பொழிய ஆரம்பித்துள்ளது.

எனினும் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் யுத்த நிறுத்தம் கடந்த மாதம் முறிவடைந்தது தொடக்கம் அலெப்போவில் உக்கிர தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய போர் விமானங்கள் பங்கர் குண்டுகள் மற்றும் ஏனைய குண்டுகளை போட்டதாக கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். செயற்பாட்டாளர்களால் பகிரப்பட்டிருக்கும் புகைப்படங்களில் சிறுவர்களின் சடங்கள் வீதியில் வைக்கப்பட்டிருப்பது காண்பிக்கப்பட்டுள்ளது.

சிரிய உள்நாட்டு யுத்தம் ஆரம்பிக்கும் முன்னர் வர்த்தக நகராக இருந்த அலெப்போ தற்போது கிளர்ச்சியாளர் மற்றும் அரச கட்டுப்பாட்டு பகுதியாக பிரிந்து காணப்படுகிறது. எனினும் இந்த நகரை முழுமையாக கைப்பற்றும் முயற்சியாகவே ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசு ரஷ்யாவின் உதவியோடு அங்கு தாக்குதலை தொடுத்துள்ளது.

இந்நிலையில் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு அலெப்போ நகர் அரச படையால் முற்றுகையில் வைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள 275,000 மக்கள் முற்றாக அழிக்கப்படும் அபாயம் இருப்பதாக ஐ.நா எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் அலப்போவில் இயங்கும் எல்லைகளற்ற மருத்துவர் அமைப்பு நகர் முழுவதற்கும் தம்மிடம் 11 அம்புலன்ஸ் வண்டிகளே எஞ்சி இருப்பதாக செவ்வாயன்று குறிப்பிட்டது. ஏற்கனவே 5 அம்புலன்ஸ்கள் குண்டு தாக்குதலில் சிக்கி இருப்பதோடு மேலும் எட்டு வண்டிகள் முக்கிய உதிரிப்பாகங்கள் இன்றி இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. 

3 comments:

  1. All Those World Leaders, who has been given the power by GOD, why keep silent... ? If any of your son or daughter got trapped inside Alepo, will you keep silent ? Please Do not delay in acting upon Russia, Assad and Iran asking and forcing them to stop the EVIL bombardment on public who does not oppose any of the above. If they wanted to kill ISIS, do it but not at the cost of public and especially weak elderly and kids there.

    May God Make the World leaders to act.. if they Neglect.. We pray God to Neglect them, when they get the same strike.

    Oh leaders.. for your own political gains and fuel economy.. you let the innocent to die and enjoy your world.

    Oh putin,, for you regional control and gas pipe line bussiness. to foster your citizens.. do you think killing innocent syrians is the way.. WE ASK the Same God who created you and me.. to punish you in this world and hereafter.

    If you kids are among the syrian people..will you do this ... GOD is enough for you.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Indeed Syria belong to Assyrians (Christians), not Muslims.
    During 1914-192: Ottoman (Muslims) empire did genocide Assyrians and occupied their land.

    Now Assyrians live all over the world as refugees.

    It's facts, now history,
    But it doesn't mean these innocent people need to suffer like this.
    Not sure why are they fighting non-stop?

    ReplyDelete

Powered by Blogger.