"ஆயுதங்களை கீழே வைக்கமாட்டோம் என, இறைவனிடம் வாக்குறுதி அளித்திருக்கிறோம்”
-தினகரன்-
அலெப்போ போரில் இருந்து வாபஸ் பெறுவதை சிரிய அரச எதிர்ப்பு கிளர்ச்சியாளர்கள் நிராகரித்துள்ளனர்.
அலெப்போவில் பயங்கரவாதிகளிடம் இருந்து மிதவாத கிளர்ச்சியாளர்கள் வெளியேற அனுமதிக்கும் வகையில் அங்கு தாக்குதல்களை நிறுத்தும் அறிவிப்பொன்றை ரஷ்யா வெளியிட்ட நிலையிலேயே கிள ர்ச்சியாளர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
“எந்த ஒரு வெளியேற்றத்தையும் நிராகரிக்கிறோம். அது சரணடைவதாகும்” என்று அலெப்போவை தளமாகக் கொண்ட பஸ்தகிம் குழுவின் அரசியல் அதிகாரி சகரி மலஹிப்ஜி குறிப்பிட்டுள்ளார்.
கிளர்ச்சியாளர்கள் நகரில் தொடர்ந்து போராடும் என்று பலம்மிக்க இஸ்லாமியவாத குழுவான அஹரார் அல் ஷாமின் தளபதிகளில் ஒருவரான அல் பாரூக் அபூ பக்கர் குறிப்பிட்டார்.
“கைவிடப்பட்ட எமது மக்களுக்காக ஆயுதத்தை நாம் கையில் ஏந்தி புரட்சியை ஆரம்பித்தபோது, இந்த குற்றவாளி அரசு கவிழ்க்கப்படும் வரை நாம் அதனை கிழே வைக்கமாட்டோம் என்று இறைவனிடம் வாக்குறுதி அளித்திருக்கிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டார். இதில் அவர் ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசையே குறிப்பிட்டுக் கூறினார்.
நல்லெண்ண அடிப்படையில் அலெப்போவில் வான் தாக்குதலை நிறுத்துவதாக குறிப்பிட்டிருக்கும் ரஷ்யா அங்குள்ள கிளர்ச்சியாளர்களை வெளியேறும்படி கோரி இருந்தது.
One day soon or later, Russia will pay high price for its wrong evil action toward syrian Muslims.
ReplyDelete