ஊழல் மோசடிகளுக்கு துணைபோன ரணில் - நாற்றமடிக்கும் நல்லாட்சி
-TW-
அர்ஜுன் மகேந்திரன் மத்திய வங்கி ஊழல்களில் நேரடியாக தொடர்புபட்டுள்ளார் என்பது இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை மூலமாக நிரூபிக்கப்பட்டது.
இது வரையிலும் கோப் குழுவின் அறிக்கை உண்மையை வெளிப்படுத்துமா? என்ற கேள்வி அனைவராலும் எழுப்பப்பட்டு வந்தது. தற்போது ஊழல்கள் தொடர்பில் முழுமையான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த அறிக்கை பிரதமரை மட்டுமே குறிவைக்கின்றது. என்பது இன்று இடம்பெற்ற பாராளுமன்ற உரைகளின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டது.
ஏற்கனவே அர்ஜுன் மகேந்திரன் நாட்டை விட்டு தப்பியதாக கூறப்பட்ட விடயத்தை பிரதமர் இன்று மறுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து அனைவரது பார்வையும் பிரதமரை நோக்கி நகர்ந்தது.
மேலும் ஊழல்கள் தொடர்பிலான அறிக்கைகள் பாராளுமன்றத்திற்கு கொண்டு வர முடிந்தது மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சியின் மூலமாகவே என்பதனையும் ரணில் சுட்டிக்காட்டினார்.
சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் தொடர்பில் முறையான விவாதங்களை மேற்கொள்வோம். அர்ஜுன் மகேந்திரன் தப்பிச் செல்லவில்லை மீண்டும் வருவேன் என என்னிடம் கூறிவிட்டே சென்றார் எனவும் ரணில் தெரிவித்தார்.
பின்னர் குறித்த கருத்தும் விமர்சனங்களுக்கு உள்ளாகியது. ரணிலுக்கு கூறிவிட்டு அர்ஜூன் மகேந்திரன் செல்ல வேண்டிய அவசியம் என்ன? அவர்கள் இருவரும் என்ன பேசி இருப்பார்கள் மகேந்திரன் நான் தப்பிச் செல்கின்றேன் என ரணிலுக்கு கூறிவிட்டா சென்றார்?
இதன் மூலம் ஐக்கிய தேசிய கட்சி மறைமுக நாடகம் ஆடி வருகின்றது என்பது தெளிவாகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க பாராளுமன்ற வெளிவளாகத்தில் வைத்து ஊடகம் ஒன்றிக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
இதேவேளை அர்ஜூன் மகேந்திரன் வெளிநாட்டுக்கு சென்றது, அவரைக் காப்பாற்றி வருவது, அவருடன் ஊழல்களுக்கு துணை நின்றது அனைத்துமே பிரதமரின் சதித்திட்டம். அதனால் பிரதமர் மீது விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்பதே கூட்டு எதிர்க்கட்சியினரின் கோரிக்கையாக காணப்பட்டு வருகின்றது.
ஆனாலும் பிரதமர் தரப்பு குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்று கருத்து தெரிவித்திருந்தாலும் அர்ஜூன் மகேந்திரன் தொடர்பிலான அறிக்கைக்கு வெளிப்படையான கருத்துகளை இன்று தெரிவிக்கவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.
மேலும் ஊடகங்களிடம் வெளிப்படையாக நல்லாட்சி ரணில் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த நாமல் ராஜபக்ச இன்றைய தினம் பாராளுமன்றம் வருகை தந்திருந்த போதும் கருத்துகளை தெரிவிக்கவில்லை மௌனமாகவே இருந்தார்.
எவ்வாறாயினும் ஆரம்பம் முதலாகவே ரணிலுக்கும் அர்ஜுன் மகேந்திரனுக்கும் தொடர்பு உண்டு என்று கூறப்பட்டு வந்த கருத்துகளுக்கு மத்தியில் அர்ஜுன் மகேந்திரன் தொடர்பில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது. அத்தோடு பிரதமர் மீதும் விசாரணைகள் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கட்டாயமாக பிரதமர் பல்வேறு விதமான விமர்சனங்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்பதே உண்மை. இதன் காரணமாக பிரதமர் புதிய சிக்கலுக்கு முகம் கொடுக்க ஆயத்தமாகியுள்ளார் எனவும் கூறப்படுகின்றது.

Ranil must be summoned for a rigorous inquiry regarding the alleged corruption. If the accusations against him are proved then he must be given severe punishment for embezzlement.
ReplyDeleteRanil must be summoned for a rigorous inquiry regarding the alleged corruption. If the accusations against him are proved then he must be given severe punishment for embezzlement.
ReplyDelete