முஸ்லிம்களுக்கு வீடு இல்லை - சுவிட்சர்லாந்தில் வெளியாகியுள்ள விளம்பரம்
சுவிட்சர்லாந்து நாட்டில் இஸ்லாமியர்கள் தவிர்த்து மற்றவர்கள் வீடு வாடகைக்கு விண்ணப்பிக்கலாம் என இணையத்தளம் மூலம் வீட்டு உரிமையாளர் ஒருவர் விளம்பரம் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூரிச் நகரை சேர்ந்த வீட்டு உரிமையாளர் ஒருவர் தான் சர்ச்சைக்குரிய இந்த விளம்பரத்தை வெளியிட்டுள்ளார்.
இரண்டு அறைகள் உள்ள வீடு ஒன்றை வாடகைக்கு விட Immoscout24 என்ற இணையத்தளத்தில் அவர் விளம்பரம் வெளியிட்டுள்ளார்.
அதில், ‘இஸ்லாமியர்களை தவிர்த்து, சுவிஸ், ஜேர்மன் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் வாடகைக்கு விண்ணப்பிக்கலாம்’ என குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இனவெறியை தூண்டும் விதமான இந்த விளம்பரத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் வீட்டு உரிமையாளர் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
‘இஸ்லாமியர் ஒரு நாளில் அடிக்கடி தொழுகையில் ஈடுப்படுவதும் பாடல்களை பாடுவதுமாக இருப்பதால் அவர்களுக்கு வீடு வாடகைக்கு கிடைக்காது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
வீட்டு உரிமையாளரின் இந்த விளம்பரம் பொலிசார் வரை சென்றதை தொடர்ந்து அந்த விளம்பரம் உடனடியாக நீக்கப்பட்டது.
விளம்பரத்தை வெளியிட்ட இணையத்தளத்தை தொடர்புக்கொண்டபோது, ‘இணையத்தளத்தில் அடுத்தடுத்து சுமார் 80,000 விளம்பரங்கள் வெளியாவதால், சர்ச்சைக்குரிய விளம்பரங்களை இனம் கண்டு நீக்குவதில் சிக்கல் ஏற்படுகிறது’ என விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment