அமைச்சர்களில் மஹிந்தவின் உளவாளி - ராஜித சேனாரத்ன
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு விடயம் குறித்து உரிய தீர்மானம் எடுத்து அதை அனைவருக்கும் தெரிவிக்கும் முன்பதாகவே மஹிந்த ராஜபக்ஸவுக்கு அந்த தகவல் சென்றுவிடுவதாக சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று -19- அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் பல பரபரப்பான தகவல்களை வெளியிட்டார்.
ஜனாதிபதியின் செயற்பாடுகள், அவர் எடுக்கும் முடிவுகளைப் பற்றி கண்காணிப்பதற்காக மஹிந்தவின் உளவாளி ஒருவர் மைத்திரியுடன் இருப்பதாகவும், இதனாலேயே மைத்திரி எடுக்கும் அனைத்து முக்கியமான முடிவுகளையும் மஹிந்த அறிந்து கொள்கின்றார் என்றும் கூறினார்.
இதற்கு ஒரு உதாரணத்தையும் அமைச்சர் கூறினார். அதாவது, டுபாயில் உள்ள வங்கி ஒன்றில் மஹிந்தவுடன் தொடர்புபட்ட முக்கியஸ்தர்களின் பணவைப்பு தொடர்பாக அரசாங்கம் அறிந்து கொண்டு, அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த பின்னர் ஒரு தீர்மானம் எடுப்பதற்கு தயாராக இருந்த சந்தர்ப்பத்தில் மஹிந்தவிடமிருந்து மைத்திரிக்கு தொலைபேசி மூலம் அழைப்பு வந்ததாகவும், அதில் டுபாய் வங்கியிலுள்ள பணவைப்பு தொடர்பாக அறிக்கை தயாரிக்கப்பட்ட விடயம் தொடர்பாக மஹிந்த வினவியுள்ளார்.
ஊடகங்களுக்கோ, மற்றைய அமைச்சர்களுக்கோ இது தொடர்பாக அறிந்திருக்காத சந்தர்ப்பத்தில் மஹிந்த மட்டும் அதை எவ்வாறு அறிந்து கொண்டார்.
மேலும், ஒப்பந்தத்திலோ அல்லது ஒரு அறிக்கையிலோ கையொப்பமிடுவதற்கு முன்னர் மஹிந்த இது தொடர்பாக அறிந்து விடுவார் என்றும் ராஜித குறிப்பிட்டார்.
மஹிந்தவின் ஆதரவாளர்கள் தற்போதைய அரசாங்கத்திலும், அரச திணைக்களகங்களிலும் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும், இவர்கள் சுயாதீனமாக இருப்பதைப் போல் காட்டிக்கொள்வதற்காக சில நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமைச்சர் குற்றம் சுமத்தினார்.
பாரிய ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட மஹிந்த போன்றோரை விசாரணை செய்வதில்லை எனவும், தம்பக்கம் நியாயம் இருப்பதைக் காட்டிக்கொள்வதற்காக கடந்த காலங்களில் சிறு சிறு தவறுகளை செய்த சிலரையே விசாரணைகளுக்கு உட்படுத்துவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
நம்பிம்பிட்டோம்ம்ம்,., அட அட என்ன ஒரு கண்டுடுடு பிடிப்பு உங்களுக்கு ,ஆஸ்கார் விருதுக்கு மை & அணில் நிச்சயம் சிபாரிசு செய்து ந(நொ)ல்லாட்சியின !!! ??? சாதனை !!! ???? மாக்களுக்கு நாமம் ம்ம்ம்..,.
ReplyDelete