யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலையும், மேர்வின் சில்வாவும்..!!
யாழ்ப்பாணத்தில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் பொலிஸார் தண்டிக்கப்பட்டமையை முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கண்டித்துள்ளார்
தமது அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இந்த செயலை கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்
பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டே பொலிஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டிருந்தது.
இதன்போது மது அருந்திய நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை பொலிஸார் இடைமறித்தனர்.
எனினும் அதனை பொருட்படுத்தாது மோட்டார் சைக்கிளில் சென்றோர் பயணித்த போது பொதுமக்களின் நலன்கருதியே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
இந்தநிலையில் நாட்டை காத்த வீரர்கள் என்றும் பார்க்காமல் விபத்து நடைபெற்ற விரைவைக் காட்டிலும் விரைவாக சம்பவத்தில் தொடர்புடைய பொலிஸார் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இது நாட்டை காத்த படைவீரர்களுக்கு கௌரவ குறைச்சலை ஏற்படுத்துகின்ற செயலாகும் என்றும் மேவின் சில்வா தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் சர்வதேச கோரிக்கைக்கு ஏற்ப இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படுமானால் அதனை தாம் கண்டிப்பதாகவும் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இனவாதத்தின் வடிவங்களாக இதை பார்க்கலாம் இதுவே தென் பகுதியில் நடந்திருந்தால் இவரின் கருத்து என்னவாக இருந்திருக்கும்?
ReplyDeleteநாட்டை காத்த போலீசார் என்றால் பொது மக்களை சுட்டுக்கொல்ல என்ன நியாயம்.போலீசாரை வெட்டியவர்களுக்கு தண்டனை சட்டத்தின் படி கொடுக்க வேண்டும் அதில் மாற்றுக்கருத்து இல்லை சம்மந்தமில்லாமல் இவர் உளறுவது இவன் போன்றவர்கள் நாட்டில் இருந்தாலே நாட்டுக்கு சாபக்கேடுதான்.வாய்க்கும் மூளைக்கும் சம்மந்தம் இல்லாமல் பேசும் பாவிகள்.நவநீதம் பிள்ளையை திருமணம் முடிக்கப்போறேன் என்று சொன்ன பைத்தியம்தான் இது
ReplyDelete