சிறைச்சாலை வைத்தியசாலையில் நிரம்பிவழியும் அரசியல்வாதிகள்..!
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல்வாதிகள் பலர் தற்போது வரையில் சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் பிரதானமாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா திடீர் சுகயீனம் காரணமாக அண்மையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர காய்ச்சல் காரணமாக துமிந்த சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் காய்ச்சல் குணமடைந்துள்ள போதிலும் தொண்டை புண் மற்றும் ஏனைய பல நோய்களில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி அவர் வைத்தியசாலையிலேயே தங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.
அதேபோல் விளக்கமறியலில் வைக்கப்பட்ட தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினராக ஜயந்த சமரவீர விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாள் அன்றே வெலிக்கடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்ச, லோஹான் ரத்வத்தேயின் சகோதரரான சானுக ரத்வத்தே ஆகியோரும் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத பிரேமசந்திரவை கொலை செய்த குற்றச்சாட்டில் துமிந்தவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வெட்கக்கேடு. நீதித்துறை இவ்வளவு வேகமாக பின்னுக்கு செல்வதை பார்க்கும்போது நாமும் இலங்கையில் பிறந்தோமா என்று தோன்றுகின்றன
ReplyDelete