Header Ads



முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுவதாக, ஓநாய்கள் ஓலமிடுகின்றன - அசதுத்தீன் உவைசி

மோடி அரசு முத்தலாக் விசயத்தில் முஸ்லிம் தனியார் சட்டத்தோடு விளையாடும் வேலையை ஆரம்பித்திருக்கிறது

முஸ்லிம் பெண்கள் பாதிக்கபடுகினறனர் என்று ஓய்நாய் கூட்டங்கள் ஓலமிட்டு கொண்டுள்ள இந்த நேரத்தில்  மஜ்லிஸ் கட்சியின் தலைவரும் ஹைதராபாத் நாடளுமன்ற உறுப்பினருமான அசதுத்தீன் உவைசி இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அந்த சந்திப்பின் போது

வேற்றுமையில் ஒன்றுமை என்ற இந்தியாவின் தனித்துவத்தை பொது சிவில் சட்டம் அழித்து விடும் என எச்சரித்தார்

பல்வேறு இனங்களையும் மதங்களையும் கலாட்சாரங்களையும் கொண்ட இந்தியாவிற்கு பொது சிவில் சட்டம் பொருந்தது என்று கூறிய உவைசி

அது இந்தியாவின் தனித்துவமும் அடையாளமுமான வேற்றுமையில் ஒன்றுமை என்ற முழக்கதிற்கு வேட்டு வைத்து விடும் என்று எச்சரித்தார்

முத்தலாக் தொடர்ப்பாக சட்டகமிஷனுக்கு உரிய பதிலை தமது இயக்கம் வழங்கும் என்று கூறிய அவர் இந்தயாவில் உள்ள பல்வேறு மாநில மக்களும் பல்வேறு விதமான சலுகைகளை பெற்று கொண்டுள்ளனர் என்றும்

இந்து சமுததயத்தினர் கூட்டு குடும்ப முறையில் வாழும் போது பெறும் வரி சலுகையை மற்ற மதத்தவர் பெறுவதில்லை என்றும் கூறினார்

மிஜோராம் நாகலாந்து மக்கள் பெற்றிருக்கும் தனி உரிமையை இவர்களால் ஒரு போதும் பறிக்க இயலாது என்று கூறிய அசதுத்தீன் உவைசி மொத்தத்தில் பொது சிவில் சட்டம் என்பது இந்தியாவை நிலைகுலைய வைத்தி விடும் என்று எச்சரித்தார்

No comments

Powered by Blogger.