மைத்திரிபால சிறிசேனவின் கோபத்தை, நியாயப்படுத்தும் ஹெல உறுமய
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோபப்படுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தேசிய அமைப்பாளர் நிசாந்த சிறி வர்னசிங்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல பன்னிப்பிட்டி வீதியில் அமைந்துள்ள ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
ஊழல் மோசடிகள் மேற்கொண்ட நபர்களை விசாரணை செய்து தண்டனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் தமது பொறுப்புக்களை நிறைவேற்ற நாளுக்கு நாள் காலம் தாழ்த்தி வருவதுடன் அவற்றின் செயற்பாடுகள் குறித்தும் திருப்தி அடைவதற்கு இல்லை.
எனவே, குறித்த நிறுவனங்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆத்திரப்படுவதில் வியக்க வேண்டிய விடயம் எதுவுமில்லை.
இந்த நிறுவனங்கள் முன்னாள் பாதுகாப்பு தரப்பு உத்தியோகத்தர்களை நீதிமன்றில் நிறுத்த காட்டும் ஆர்வம், பாரியளவில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு காட்டுவதில்லை.
இந்த விடயம் தொடர்பில் நாட்டு மக்களும் அதிருப்தியுடன் இருக்கின்றார்கள் என நிசாந்த சிறி வர்னசிங்க தெரிவித்துள்ளார்.
Post a Comment