Header Ads



எழுச்சிபெறும் வடக்கு முஸ்லிம்கள், தமிழர் கோரிக்கைகள் மழுங்கடிக்கப்படுமா..?

-அதாஸ் முஹம்மத்-

யாழ்ப்பாணம் மன்னார் முல்லைத்தீவு வவுனியா கிளிநொச்சி பிரதேசங்களில் வாழ்ந்த 75000 இக்கும் அதிகமான முஸ்லிம்கள் ஆயுத முனையில் அவர்களது தாயகப்பூமியை விட்டு  1990 ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதிக்கும் 30 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் வெளியேற்றப்பட்டு இந்த ஒக்டோபருடன் 26 வருடங்களாகின்றன. இங்கு ஆச்சரியம் என்னவென்றால் இந்த இனச்சுத்திகரிப்பைச் செய்த எல்ரீரீஈ புலிகள் யார் என்றால் அவர்கள்  சிங்கள பெரும் பாண்மையினம்; சிறுபாண்மைத் தமிழர்களுக்கு உரிமைகளையும் சமஅந்தஸ்தையும் வழங்கவில்லை என்று தனியான தமிழீழம் கேட்டு 30 வருடங்களுக்கு மேலாக ஆயுதப்போராட்டம் நடத்தியவர்கள். ஆனால் தாம் கேட்ட அதே உரிமைகளை தமது சிறுபாண்மையான முஸ்லிம்களுக்கு மறுத்தது மட்டுமல்ல அவர்களைக் கொலை செய்து கொள்ளையடித்து வெளியேற்றி தமிழர்களின் வரலாற்றில் இன்னொரு கறைபடிந்த அத்தியாயத்தை எழுதிவிட்டார்கள். 
1990 ஒக்டோபரில் நிகழ்ந்த இந்த இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையால் அப்பாவிகளாக தமிழரை நம்பி தமது பொருளாதாரங்களை கட்டியெழுப்பியிருந்த முஸ்லிம் சில நிமிடங்களுக்குள் பணம் நகை பெருமதியான பொருட்கள் வீடுவாசல் போன்ற அனைத்து சொத்துக்களையும் இழந்து நிர்க்கதியான நிலையில் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு அப்போது அரசாங்கக் கட்டுப்பாட்டில் இருந்த நாட்டின் பல்வேறு பிரதேசங்களையும் அகதிகளாகச் சென்றடைந்தனர். பாலகர்களுக்கான பால்மா பக்கட்களையும் பறித்தெடுத்ததனால் இரண்டு நாட்களுக்கு மேல் பால் குடிக்காமல் நீரை மட்டும் குடித்த பிள்ளைகள் ஆயிரம்.  கையிலிருந்த பணத்தையும் நகைகளையும் எல்ரீரீஈ பறித்தெடுத்திருந்ததால் உணவுகளையோ  வேறு தின்பண்டங்களையோ தின்று பசியாற முடியாமல் களைப்புடன் நம்பிக்கையீனத்துடன் இரண்டு நாள் பிரயாணத்தை வேதனையுடன் அனுபவித்து அகதிமுகாம்களை  அடைந்தவர்கள் தாம் வடக்கு முஸ்லிம்கள். 
இவ்வாறு அகதிகளாக வந்தவர்கள் ஆரம்பத்தில் பாடசாலைகள் அரச கட்டிடங்கள் என்பவற்றில் தஞ்சம் வழங்கப்பட்டனர். பின்னர் வெறும் மண்தரையில் அமைக்கப்பட்ட கூடாரங்களில் தங்கவைக்கப்பட்டனர். நிலத்தில் விரிக்க பாயுமில்லை போர்வையுமில்லை. எல்லாவற்றையும் புலிகள் பறித்தெடுத்திருந்தனர். வெறும் நிலத்தில் மாசக்கணக்கில் படுத்துறங்கியவர்களுக்கு ஒரு வருடத்தின் பின்பே தரைகள் சீமெந்திடப்பட்டன. முள்ளிவாய்க்கால் அவலம் என்றால் யுத்தத்துடன் சம்பந்தப்படாத முஸ்லிம்கள் அனுபவித்தது பேரவலமாகும்.
இந்தக் கொடுமைகளை புலிகள் செய்து இன்று அந்த இயக்கமே இல்லாமல் அழிந்துவிட்டது. 2009 மே 19 ஆம் திகதி யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் 2010 இல் முஸ்லிம்கள் தமது தாயகம் திரும்பிச் சென்று பார்த்த வேளையில் அவர்களுக்கு காத்திருந்தது அதிர்ச்சியும் வேதனைகளும் தான். அவர்களின் வீடுகள் வீடுகள் எல்லாம் உடைக்கப்பட்டு கதவு நிலை யன்னல்கள் கூரைகள் என்பன களவாடப்பட்டிருந்தன. வீட்டுச் சுவர்கள் கூட தமிழர்கள் தங்கள் வீடுகளைக் கட்டுவதற்காக உடைத்து எடுத்திருந்தனர். கைவிடப்பட்ட வீடுகளுக்குள்ளும் காணிகளிலும் மரங்களும் பற்றைகளும் வளர்ந்து காடாகியிருந்தது. இந்தக் பற்றைகளை அகற்ற முஸ்லிம்கள் முயன்ற  போது காட்டை அழிக்கின்றனர் என்று கோசமிட்டு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு தடைகளை ஏற்படுத்தி தமிழர்; தமது இனத்துவேசத்தை  வெளிப்படுத்தியிருந்தது. வுரலாறறில் என்றுமே மன்னிக்க முடியாத இழிசெயலாகும். 
2010 ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்துக்காக முஸ்லிம்கள் மேற்கொண்ட முயற்சிகள் தமிழ் அதிகாரிகளினால் திட்டமிட்டு தடுக்கப்பட்டன. தமது வீடுகளுக்குள் வளர்ந்துள்ள பற்றைகளை அகற்றினால் காட்டையழிக்கிறார்கள் என்று கூக்குரலிட்டார்கள். தமது வீட்டைத் திருத்த அரச நிதியிலிருந்து பணத்தைக் கேட்டால் புதிய அகதிகளாகிய தமிழர்களுக்கே அவை முஸ்லிம்கள் பழைய அகதிகள் அதனால் உங்களுக்கு வழங்கமுடியாது என்று சொன்னார்கள். மீளக்குடியேறச் சென்றவர்கள் 2010 இல் பதிவு செய்யுமாறு கேட்கப்பட்டனர். 2011 இல் மீண்டும் பதிவு செய்யுமாறு கேட்கப்பட்டனர். 2012 இல் மீண்டுமொரு முறை பதிவு செய்யப்பட்டனர். முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கவும் அவர்களுக்கு இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழோ ஐரோப்பிய வீடமைப்புத் திட்டத்தின் கீழோ வீடுகள் கிடைக்கக் கூடாது என்பதற்காக புதிய நிபந்தனைகளை வடக்கு அதிகாரிகள் போட்டனர். வன்னி தேர்தல் தொகுதி அமைச்சர் ரிஸாத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததால் தமிழர் போட்ட தடைகளில் சிலவற்றை உடைத்தெறிந்து அவர் வெற்றி கண்டார். 

ஆனால் யாழ்ப்பாணத்தைப் பொருத்தவரை தமிழ் அதிகாரிகள் முஸ்லிம்களைக் மீள்குடியேற விடக் கூடாது என்ற பிடிவாதத்துடன் காய்களை நகர்த்தினர். மீள்குடியேற்ற பதிவுகள் செய்யப்பட்டு ஐந்து வருடங்களாக யாழ்ப்பாணத்தில் வீடுகள் எதுவும் வழங்கப்படாது இழுத்தடிக்கப்பட்டது. இறுதியில் நௌஸாத் என்பவர் வீட்டுதவி முஸ்லிம்களுக்கும் வழங்கபப்பட வேண்டுமெனக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதால்  25 வீடுகள் வழங்கப்பட்டன. இது போதாது என ஆர்ப்பாட்டங்கள் செய்த போது மேலும் 24 வீடுகள் வழங்கப்பட்டன. அதாவது 2010 இல் பதிவு செய்தவர்களுக்கு 2015 இல் தான் வீடுகள் வழங்கப்பட்டன. 2100 பேர் 2010 ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்துக்காக பதிவு செய்திருந்தனர். அவர்களில் 49 பேருக்கு மட்டும் ஐந்து வருடங்களின் பின்னர் வீடுகளை வழங்கி தமது அதிகார அகங்காரத்தைக் காட்டியிருந்தனர். 
இந்நிலையில் மேலும் பல போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் முயற்சிகள் என்பன மேற்கொள்ளப்பட்டதன் பலனாக மேலம் 75 பேருக்கு வீடுகள் கட்டுவதற்கான நிதி  2016 இல் வழங்கப்பட்டு வருகின்றது.இவ்வாறான அநீதிகள் இழுத்தடிப்புகள் ஏமாற்று வேலைகள் போன்ற எல்லாறவற்றையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர் விடுதலைக் கூட்டணி புளொட் ஈபீஆர்எல்எப் டெலோ  ஈபிடிபி போன்ற அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் வேடிக்கை பார்த்துக் கொண்டடிருப்பதில் இருந்து திமைறைவில் இவர்களே அரச அதிகாரிகளின் முள்லிம் விரோதப் போக்குக்கு பக்கபலமாக இருந்து வருகின்றனர் என்பது புரிகின்றது. 
முஸ்லிம்களின் ஜெனீவா நோக்கிய பயணம்
இவ்வாறு தமிழர்களால் பலமுறை வெளியேற்றத்தை முகம் கொடுத்த முஸ்லிம்கள் மீள்குடியேற்த்துக்கான தடைகளையும் இழுத்தடிப்புகள் ஏமாற்று வேலைககள் என்பவற்றை இனியும் பொறுக்க முடியாத நிலையில் யாழ்ப்பாண முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச யாழ் முஸ்லிம் சமூக அமைப்பினர் 27.9.2016 அன்று ஐக்கிய நாடுகள் சபைபின் ஜெனீவா மாநாட்டுக்குச் சென்று மனித உரிமைக்கும் சிறுபாண்மையினர் உரிமை காக்கும் பிரிவைச் சேர்ந்தவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளனர்.  அங்கு வந்திருந்த அதிகாரிகள் இவ்வளவு விடயங்கள அநீதிகள் நடந்துள்ளது, நீங்கள் ஏன் இவ்வளவு காலமும் வராது இருந்தீர்கள் என்று கேட்டுள்ளார்கள். மேலும் இது  தமிழர்களின் கோரிக்கைகளை பாதிக்கும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள தடைகள்  சம்பந்தமாக மேலும் பல கலந்துரையாடல்களுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பு அழைப்புவிடுத்துள்ளது. 

யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றப்பிரச்சினை தற்போது ஐ.நா.  மனித உரிமைகள் ஆணையகம் வரை சென்றுள்ளது. மீள்குடியேற்றத்தில் எதிர் நோக்கப்படும் சவால்களாக பின்வருவன கூறப்பட்டுள்ளன. 
1. 2010 மற்றும் 2011 இல் 2165 பேர் விண்ணப்பித்திருக்க அவர்களுக்கு வீடமைப்புத் திட்டம் வழங்கப்படாமல் கடந்த ஆறு வருடங்கள் இழுத்தடிப்பு யாழ் அரச அதிகாரிகளால்  மேற்கொள்ளப்பட்டுள்ளது. புல்வேறு ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்களுக்கு பின்னர் 125 பேருக்கு வீடமைப்பு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த இழுத்தடிப்பு நியாயமா?
2. வீடமைப்புத் திட்டத்தில் பழைய அகதிகள் புதிய அகதிகள் என்ற பாகுபாடு உருவாக்கப்பட்டு புதிய  நிபந்தனைகள் புகுத்தப்பட்ட யாழ்ப்பாண முஸ்லிம்கள் மீது அநீதி இழைக்கப்பட்டது. 
3. யாழ்ப்பாண முஸ்லிம்கள் ஒரு வருடத்துக்கு மேல் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தும் அவர்களுக்கு மீள்குடியேற்றக் கொடுப்பனவுகள் வழங்கப்படாதது ஏன்?
4. வீடமைப்புக்கான வரைபுகள் மற்றும் காணியுறுதிப்பிரதிகள் வழங்கப்பட்ட பின்னர் முடிவுகள் எதுவும் தெரிவிக்கப்படாமை ஏன்?
5. 2010, 2011, 2012 இல் பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் 2016 இல் மீண்டும் பதிவு செய்யப்பட்டது ஏன்? ஏற்கனவே வழங்கப்பட்ட ஆவணங்களுக்கு என்ன நடந்தது? யாழ் அதிகாரிகள் அதற்கான பணத்தை ஏப்பம் விட்டனரா? 
6. 2013 இல் பதவிக்கு வந்த வடமாகாண சபை யாழ் முஸ்லிம்களின் வீடமைப்பு மீள்குடியேற்றப் பிரச்சினைகளுக்கு என்ன தீர்வுகளை செயற்திட்டங்களை முன்வைத்தது? 
7. யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் இழுத்தடிக்கப்பட்டும் தமிழ் அரசியல் தலைவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது ஏன்?
இவ்வாறாக பல்வேறு விடயங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்துக்கும் சிறு பாண்மை உரிமை காக்கும் பிரிவுக்கும் வழங்கியுள்ளனர். யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மேலும் இழுத்தடிக்கப்படுமானால் ஐக்கிய நாடுகள் சபையின் 2017 அமர்வுகளின் போது இந்த விவகாரம் பூதாகாரமாக்கப்படலாம். அவ்வாறான ஒரு சூழ்நிலையில் தமிழர் பிரச்சினை சமஷ்டி கோரிக்கை வடக்கு கிழக்கு இணைப்பு என்பன எடுபடாமல் போகலாம். ஆறு வருடங்கள் பொறுமை காத்த முஸ்லிம்கள் தற்போது வீறுகொண்டெழுந்துள்ளார்கள். அடுத்த சில மாதங்களுக்குள் யாழ்ப்பாணத்தில் வீடுகள் அழிவடைந்த நிலையிலுள்ள  காணிகளில் வீடமைக்கவும் ஏற்கனவே குடியேறியுள்ளவர்களுக்கு காணியுடன் கூடிய வீடும் மேலும் பரைச்சேரி என்ற இடத்திலுள்ள கைவிடப்பட்ட வயல்காணிகளில் விடுகட்ட அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டால் ஓரளவு தப்பிக் கொள்ளலாம். 

தமிழர்கள் முஸ்லிம்கள் மீது தொடர்ச்சியாக அடக்குமறைகளை பிரயோகித்து வந்ததன் காரணமாக யாழ்ப்பாண முஸ்லிம்கள் இன்று வெகுண்டெழுந்துள்ளனர். 1990 ஆம் ஆண்டு ஒக்டோபரில்  பாசிஸ புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இனச்சுத்திகரிப்பு வெளியேற்ற நடவடிக்கையின் 26 வது வருடத்தை சர்வதேச மயப்படுத்தியுள்ளனர். பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம், கனடா, கட்டார் என எல்லா நாடுகளிலும் கருப்பு ஒக்டோபர் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. முஸ்லிம்கள் மீது அநீதி இழைத்து தமிழர்கள் தங்கள் மலைகளியே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்ட செயலாகத் தெரிகின்றது. ஏற்கனவே இக்கருப்பு ஒக்டோபரை நினைவுபடுத்த ஏனைய நாடுகளில் வாழும் யாழ் முஸ்லிம்களும் முயன்று வருகின்றார்கள். மேலும் ஏனைய பிரதேச முஸ்லிம்களும் இதற்கு தமது ஆதரவுகளைத் தெரிவித்து வருகின்றனர். எனவே தமிழ் தலைவர்கள் இனியாவது நீதியுடன் நடப்பார்களா என்பதிலுள்ளது தமிழர்களின் எதிர்காலம்.   

16 comments:

  1. தமிழனிடம் நீதியா? அது சிவசிதம்பரம் ஐயாவுடன் முடிந்து விட்டது...

    ReplyDelete
  2. Hahaha ... good entertainment article ..keep it up

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ் கட்டாயம் பொருமைக்கு தியாகம் என்பதற்காக கிடைத்த ஆரம்பவாடை
    Go on...... Then get old moor status

    ReplyDelete
  4. முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்க முற்பட்ட கட்டுரையாளர் தோல்வியை தழுவியுள்ளார்.
    1."கைவிடப்பட்ட வீடுகளுக்குள்ளும் காணிகளிலும் மரங்களும் பற்றைகளும் வளர்ந்து காடாகியிருந்தது. இந்தக் பற்றைகளை அகற்ற முஸ்லிம்கள் முயன்ற போது காட்டை அழிக்கின்றனர் என்று கோசமிட்டு தமிழர்; தமது இனத்துவேசத்தை வெளிப்படுத்தியிருந்தது"
    வில்பத்து விவகாரம் தமிழரா ஏற்படுத்தியிருந்தனர்.
    முல்லைத்தீவு குமிழமுனையில் காடழித்தமை உறுதி செய்யப்பட்டமையும் அது தடுக்கபட்டமையும் குறிப்பித்தக்கது.அதிகாரம் கையில் உள்ளது என்பதற்காக ஆர்வகோளாறக செயற்பட்டு மாட்டிக்கொண்டால் தமிழ் அதிகாரிகளாபாடு?வில்பத்து விவகாரத்தை பூதாகரமாக்கியது தமிழரா??தமிழர் குறித்து அடுக்கடுக்காக குற்றம் சுமத்தும் இக் கட்டுரையாளர் சிங்களவர் மீது கைகாட்ட பயந்தது ஏனோ?
    2."தமது தாயகம் திரும்பிச் சென்று பார்த்த வேளையில் அவர்களுக்கு காத்திருந்தது அதிர்ச்சியும் வேதனைகளும் தான். அவர்களின் வீடுகள் வீடுகள் எல்லாம் உடைக்கப்பட்டு கதவு நிலை யன்னல்கள் கூரைகள் என்பன களவாடப்பட்டிருந்தன"
    விடுதலைப்புலிகள் கட்டுபாட்டில் யாழ்ப்பணம் இருந்த வேளையில் அங்குவந்த பார்த்த முஸ்லீம் பிரதிநிதிகள் அங்கு தமது சொத்துகள் புலிகளால் பாதுகாக்கபட்டமை தொடர்பில் குறிப்பிட்டுருந்தனர். யாழை ரராணுவம் கைபற்றிய பிறகே ராணுவம் வீடுகளை உடைத்து ராணுவகாவல் அரண்களையும் சோதனைச்சாவடிகளையும் நிறுவியது.நிலமை இவ்வாறு இருக்க மாதம் ஒருமுறை அங்கேயும் இங்கேயுமாக இடம்பெயர்ந்து ஓடிதிரிந்த தமிழர்கள் முஸ்லீம்களின் வீடுகளை உடைத்து வீடுகட்டியதாக கூறுவது வேடிக்கை.
    3. "வன்னி தேர்தல் தொகுதி அமைச்சர் ரிஸாத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததால் தமிழர் போட்ட தடைகளில் சிலவற்றை உடைத்தெறிந்து அவர் வெற்றி கண்டார்." 2009ல் இருந்து 2013 வரை வடமாகணமே அரசின்கட்டுபாட்டில் இருந்தது. அப்படியிருக்க ரிசாத் மீள்குடீயேற்ற அமைச்சராயும்இருக்க மீள் குடியேற்ற முடியவில்லையா??

    4.பரைச்சேரி என்ற இடத்திலுள்ள கைவிடப்பட்ட வயல்காணிகளில் விடுகட்ட அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டால் ஓரளவு தப்பிக் கொள்ளலாம்.
    யாழ்ப்பாணத்தில் நிலப்பற்றாகுறைகாரணமாக தமிழர்களுக்கே தொடடர்மாடி வீட்டு திட்டமே வழங்கப்பட்டுள்ளது.வயல்காணிகளை வீடமைக்க கேட்பது நியாயமா??(பரச்சேரி விவசாய பூமி என்று பிரகடனபடுத்தப்பட்டது)
    இக்கட்டுரை அரசஇயந்திரத்தை தனது இஷ்டப்படி கையாள முயன்று தோற்ற ஒரு தனி நபருக்கான குரலே தவிர இக்கட்டுரை முஸ்லீம்களுக்கோ மீள்குடியேற்றத்துக்கோ துளியும் உதவாது.
    *தமிழர்தீர்வை முடக்கிவிட்டால் மீள்குடியேற்றம் நடைபெற்றுவிடுமா?
    கட்டுரையாளரின் தீவிர தமிழர் எதிர்ப்பும் தமிழர் தீர்வு எதிர்ப்பும் அவர் குறிப்பிட்ட தனிநபரின் தீவிர விசுவாசி என்பதை வெளிப்படுத்திகாட்டுகிறத.

    ReplyDelete
  5. Blackmailing??, good luck!

    ReplyDelete
  6. இத்தனை கொடுமைகளையும் செய்துகொண்டிருக்கும் தமிழ் தீவிரவாதம் இன்று வடகிழக்கை இணைத்து முஸ்லிம்களுக்கு தனி அலகு கொடுத்து கிழிக்கபோகிறதாம். இந்த தமிழர்களை மட்டும் எந்த நிலையிலும் நம்பக்கூடாது. அது நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் ஆப்பு.

    ReplyDelete
  7. Thank you Jaffna Muslim. we need more than more like this article.its warm up our people to involve this problem.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. மிரட்டினாலும் சரி IsIs ஐ வைத்து எம்மை கொன்றாலும் சரி எமது வயல் நிலங்களை விட்டுதரமாட்டோம்.தொடர்மாடி கட்டிடங்கள் மூலம் முஸ்லீம் மீள்குடியேற்றதை உறுதிபடுத்துங்கள்.நீங்கள் தந்த ஏறாவூர் காத்தான்குடி.,கல்முனை அனுபவங்கள் போதும்.

    ReplyDelete
    Replies
    1. திரு குமரனுக்கு
      1. பரச்சேரி வெளியில் முஸ்லிம்கள் தங்களுக்கு சொந்தமான காணிகளிலேயே வீடு கட்ட விரும்புகிறனரே தவிர தமிழர்களின் காணிகளில் அல்ல.
      2. ஏலவே இப் பூமியில் தமிழர்களுடைய 200க்கும் மேற்பட்ட வீடுகளும் தேவாலயம் ஒன்றும் அமைக்கபட்டிரும் போது முஸ்லிம்களுக்கு மட்டும் வயற்காணி சட்டம் பிரயோகிக்கப் படுவது ஏன்?
      முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கவே அன்றி வேறு எந்த ஒரு காரணத்தையும் உம்மால் கூற முடியுமா
      3.1990இல் முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தை நீர் ஆதரிக்கிறீரா அல்லது எதிர்க்கிறீரா?
      4.யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை நீர் ஆதரிக்கிறீரா அல்லது எதிர்க்கிறீரா?
      5. பலவந்த வெளியேற்றத்தின் பின்னரே வீடுகள் அழிக்கப்பட்டன என்பதை மறுக்க முடியுமா உம்மால்?
      துவேஷத்தை துடைத்தெறிந்து விட்டு நல்ல மனதுடன் நோக்கினால் மனிதன் தெரிவான். வணக்கம்.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. @Abu Aamidh
      தமிழர் தான் உங்கள் வீடுகளை சூரையாடி தமது வவீடுகளைகட்டினார்கள் என்பதற்கு ஆதரம்உண்டா?இராணுவத்தினரே அவற்றை உடைத்து முகாம்களை அமைத்தனர் கண்ணால்கண்ட எமக்கு நீர் கதை சொல்லவேண்டாம்.

      Delete
    4. முஸ்லீம்களுக்கு மட்டும் யாரும்தடைவிதிக்கவில்லை.தமிழர் வயல்நிலத்தில் வீடுகட்டவும்இல்லை வயல் தொகுதி வேறாகவும் வீடுகள் வேறாகவுமே உள்ளன.
      இங்கு யாழ்பாணத்தில்மட்டுமல்ல எல்லா மாவட்டங்களிலுமே இது தான் நடைமுறை.உங்கள் பிரச்சினை நீங்கள் நினைப்பதுதான் சரி என்ற குருட்டு நம்பிக்கை,தமிழர் அதிகாரிகள் பிழைகளை சுட்டிகாட்டினால் அவர்களை எதிரியாகப்பார்க்கிறீர்கள்.உங்கள் மேல் பிழையில்லை ,உங்கள் தலைமை என்று கூறுபவர்களும் ஊடகவியாலாளர் என்று கூறிதிரியும் சிலரும்அவ்வாறான மனநிலையை ஏற்படுத்தியுள்ளனர்.
      இதே யாழ் மாவட்டத்தில் அகதிமுகாம்களில் 30வருடமாக தமிழர்களும் உள்ளனர்.சட்டத்தை அதிகாரிகள் நினைத்தபடி கையாளமுடியுமென்றால் அவர்கள் என்றோ குடியேறியிருப்பர்.
      உங்கள் பிரச்சினை அரசஅதிகாரிகள் அல்ல அவர்கள் தமிழர் என்பதே!!

      Delete
  10. நாம் ஒன்றை மட்டும் கட்டுரையாளருக்கு கூறவிரும்பு கிறேன்.தமிழர்தீர்வைதடுத்து விட்டால் முஸ்லீம் பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்று முஸ்லீம்கள் நினைத்தால் அது முட்டாள்தனம்.அதனுடன் எல்லாம் முடிந்து விடாது.

    ReplyDelete
  11. அதாஸ் முஹம்மத் சொல்வதை முட்டாள்தனமாக நம்புவதற்கும் இங்கே ஒரு கூட்டம் இருக்கும்

    ReplyDelete

Powered by Blogger.