சிலர் புதிய பிரதமரை, தெரிவு செய்துள்ளனர் - ரணில்
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக தெரிவு செய்யவும் நல்லாட்சி தேசிய அரசாங்கம் ஆட்சியில் அமரவும் முன்னோடியாக இருந்த சிவில் அமைப்புகளுக்கும் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் ஏற்பட்டுள்ள அரசியல் ரீதியான பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்ட கருத்தை அடுத்து அரசியல் துறையில் ஏற்பட்டுள்ள நிலைமை சம்பந்தமான கருத்து வெளியிடும் போதே இதனை கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள கருத்தால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஐக்கிய தேசியக் கட்சியானது கட்சி என்ற வகையில் வலுவாக முன்னோக்கி செல்கிறது. அதே போல் நல்லாட்சி தேசிய அரசாங்கத்திற்கும் அதனூடாக நாட்டை கட்டியெழுப்பும் எமது திட்டமிட்ட வேலைத் திட்டங்களுக்கும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் ஜனாதிபதியின் கருத்தால் எந்த பாதிப்பும் இல்லை.
அத்துடன் அரசாங்கத்தில் எவ்வித பிளவும் ஏற்படவில்லை. எனினும் கூட்டு எதிர்க் கட்சியை போல் சில ஊடகங்கள் ஜனாதிபதி வெளியிட்ட கருத்தை பிடித்து கொண்டு பொய்யான மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றன. சில ஊடகங்கள் புதிய பிரதமரையும் தெரிவு செய்துள்ளன. தனக்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் பொறுப்பை நாட்டு மக்களின் எதிர்காலத்திற்காக நிறைவேற்ற போகின்றேன்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த கருத்தின் பின்னர் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை. ஆனால், இவர்கள் கனவு உலகில் இருந்து கொண்டு பெரிய சந்தோஷத்தை அனுபவித்து வருகின்றனர் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment