ரணிலிடமிருந்து வெளியாகியுள்ள உத்தரவு
இதுவரை நடத்தி வந்த விசாரணை நடவடிக்கைகளை வழமை போல் முன்னெடுத்துச் செல்லுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் நிதிமோசடி விசாரணைப் பிரிவுகளின் பொறுப்பதிகாரிகள் மற்றும் துறைக்கு பொறுப்பான அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆகியோருடன் நடைபெற்ற சந்திப்பில்,
“நீங்கள் இதுவரை முன்னெடுத்து வந்த விசாரணைகள், பரிசோதனைகளை அதே விதத்தில் முன்னெடுத்துச் செல்லுங்கள்” என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளளார்.
இதனிடையே ஜனாதிபதி நேற்று வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து காரணமாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் பதவியில் இருந்து விலக போவதாக தில்ருக்ஷி விக்ரமசிங்க, பிரதமருக்கு அறிவித்துள்ளதா தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி நேற்று வெளியிட்ட கருத்தை அடிப்படையாக கொண்டு மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிர்க்கட்சியும் அதற்கு ஆதரவான இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள், ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தி அரசாங்கத்தை ஸ்திரமற்ற நிலைக்கு கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
ரணில் மஹத்தயா,
ReplyDeleteஆடு பாம்பே, நீ ஆடு பாம்பே!
உனக்கு நல்ல பெயர் வைத்தது யார்? சொல்லு பாம்பே!
நீ ஆடு பாம்பே! ஆடு பாம்பே!
இதுவும் ஒரு நாடகமே,அப்போது தான் ஊழல் ஓநாய்களை எல்லாம் தொடர்ந்தும் கொள்ளை அடிக்க முடியும்
ReplyDelete