அலெப்போவில் பாரிய யுத்தக் குற்றம்
சிரியாவின் அலெப்போ நகரில் இருந்து பொதுமக்கள் மற்றும் போராளிகள் வெளியேறுவதற்கு வழிவிடும் வகையில் ‘மனிதாபிமாக யுத்த நிறுத்தம்’ ஒன்று அமுலுக்கு வந்துள்ளது.
ரஷ்யாவினால் அறிவிக்கப்பட்ட எழுத்துமூலமற்ற இந்த யுத்த நிறுத்தத்தில், அலெப்போவில் இருந்து வெளியேறுவதற்கு எட்டு வாயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி அலெப்போ மீதான ரஷ்யா மற்றும் சிரிய அரச படையின் வான் தாக்குதல்கள் கடந்த செவ்வாய் தொடக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.
எனினும் யுத்த நிறுத்தத்தை கிளர்ச்சியாளர்கள் நிராகரித்த நிலையில் நகரை விட்டு வெளியேறும் வாயில் ஒன்றில் மோதல்கள் இடம்பெற்று வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அலெப்போவின் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு கிழக்கு பகுதியை கடந்த மாதம் சுற்றிவளைத்த அரச படை அங்கு சிரியாவின் உதவியோடு உக்கிர தாக்குதல்களை நடத்தி வருகிறது.
அது தொடக்கம் நகரில் இடம்பெற்ற குண்டு மழையில் சுமார் 2,700 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாக சிரிய மனித உரிமைக் கண்காணிப்புக் குழு குறிப்பிட்டுள்ளது. ரஷ்யா மற்றும் சிரிய அரசின் அலெப்போ மீதான வான் தாக்குதல்கள் யுத்த குற்றங்களாக இருக்கும் என்று மேற்குல தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Post a Comment