Header Ads



பௌசிக்கு எதிரான நடவடிக்கையே, மைத்திரியின் ஆத்திரத்திற்கு காரணம்..!


நடைமுறை விசாரணைகளின் பின்னணியில் சூழ்ச்சிகள் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிசந்தேகம் வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினரும் அமைச்சருமான எஸ். பி திஸாநாயக்க இந்தகருத்தை வெளியிட்டுள்ளார்.

இராணுவத்தின் முன்னாள் அதிகாரிகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிரான இந்தநடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படவில்லை என்று அவர்குறிப்பிட்டுள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர், இராஜாங்க அமைச்சர் ஏ எச் எம் பௌசிக்கு எதிராக நீதிமன்ற அழைப்பாணை விடுத்தது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை காரணமாக 19.5மில்லியன்ரூபாய் நட்டத்தை பௌசி ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் அவரை,எதிர்வரும் 28ம் திகதியன்று நீதிமன்றில் ஆஜராகுமாறுஉத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது அமைச்சுப் பொறுப்புக்களில் உள்ளவர்கள் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்த போதுஅரசாங்க வாகனங்களை பயன்படுத்தியுள்ளனர்.

இந்தநிலையில் பௌசிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, ஜனாதிபதிக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் செயலாகும் என்றும் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இராணுவத்தின் முன்னாள் தளபதிகள் விசாரணைகளுக்கு அழைக்கப்படும் போது அது தொடர்பில்ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படவேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

1 comment:

  1. நல்லாட்சி என்றால் ஒரு முன்மாதிரி இருக்க வேண்டும் .அரை அமைச்சர் என்றாலும் முழு அமைச்சர் என்றாலும் நீதிமன்றம் இடும் ஆணைக்கு கட்டுப்பட வேண்டும் ,நீதி எல்லோருக்கும் சமம்,அதில்ஸ தலையிடுவது கூடாது என்றுதானே 19 வது கொண்டு வந்தீர்கள்,இலங்கை மக்கள் என்ன இழிச்ச வாயர்களா?

    ReplyDelete

Powered by Blogger.