Header Ads



மைத்திரிபால சிறிசேனவுக்கு, பேராசிரியர் சரத் விஜேசூரியவின் உபதேசம்

நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர முன்னின்று செயற்பட்டவர்களுக்கு இடையில் பிளவுகளை ஏற்படுத்த அரசாங்கத்தில் உள்ள சிலர் முயற்சித்து வருவதாக நியாயமான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சரத் விஜேசூரிய குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற சிவில் அமைப்புகளின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கருத்து வெளியிடும் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அரசாங்கத்துடன் இணைத்து கொண்ட சிலரது செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது.

நல்லாட்சிக்கான மக்களின் ஆணையை பாதுகாப்பதில் ஜனாதிபதி மாத்திரமல்லாது, பிரதமரும் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

இவர்கள் இருவரும் இணைந்து நல்லாட்சிக்கு எதிரான சக்திகளை அடையாளம் காண வேண்டும்.

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரணில் விக்ரமசிங்க, மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இணைந்து இந்த நாட்டுக்கு நல்லாட்சியை பெற்று தருவதாக வாக்குறுதி வழங்கினர்.

நாங்களும் அதற்காக எமது வாழ்வை அர்ப்பணித்து மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக குரல் கொடுத்தோம்.

எனினும் மைத்திரிபால சிறிசேன தன்னுடன் இணைத்து கொண்டுள்ளவர்களின் செயற்பாடுகள், நல்லாட்சியின் செயற்பாடுகளை ஸ்தம்பிக்க செய்துள்ளதுடன் இவர்களை மூவரை பிரித்துள்ளது.

இது மிகவும் பாரதூரமான தவறு ஜனாதிபதியை தோற்கடிக்க முயற்சித்தவர்களுக்கு பதவிகளை தொடர்ந்தும் ஜனாதிபதி வழங்கியுள்ளார்.
படையினர் பல மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி வேதனையுடன் பேசுகிறார்.

விசாரணைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டு, முப்படையினருக்கு ஏற்பட்டுள்ள கெட்ட பெயரை ஜனாதிபதியினால் போக்க முடியும்.

இராணுவ புலனாய்வு பிரிவில் இருக்கும் பிரதானியே இதற்கு இடமளிக்காமல் இருக்கின்றார்.

இதனால், இந்த நபரை அந்த பதவியில் இருந்து நீக்குவது அத்தியவசியமானது என நான் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

இது தொடர்பான ஜனாதிபதி துரித நடவடிக்கையை நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.

பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயலாளர் இந்த விசாரணைகளை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

இதனால், பாதுகாப்புச் செயலாளர் அந்த பதவியை வகிக்க தகுதியானவர் அல்ல எனவும் சரத் விஜேசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. உண்மையான விடயம்.

    ReplyDelete
  2. Saththiya eya janadipati tuma eya piliganeeda ?

    ReplyDelete

Powered by Blogger.