இலங்கையின் புதிய அரசாங்கம் தொடர்பில், ஐரோப்பிய ஒன்றியம் ஆச்சரியம்
இலங்கையின் புதிய அரசாங்கம் குறுகிய காலத்திற்குள் அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆச்சரியமடைந்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான புதிய தூதுவர் துங் லாய் மார்க் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று -14- சந்தித்த அவர் இதனை கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய தூதுவர் தனது நியமனக் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்த பின்னர், இருவருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இவ்வாறு கூறியுள்ளார்.
நல்லிணக்கம், பொருளாதாரம், சமூகம் உட்பட பல துறைகளில், குறுகிய காலத்தில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆச்சரியத்தில் அடைந்திருப்பதாக தூதுவர் கூறியுள்ளார்.
அத்துடன், இந்த துறைகளில் முன்னேற்றமடைய மேலும் உதவிகளை வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளதுடன், இலங்கையின் மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியமை மற்றும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீள வழங்க தலையீடுகளை மேற்கொண்டமை குறித்து ஜனாதிபதி தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
Post a Comment