'தூரநோக்குடனான தலைமைத்துவம்' என்ற தெற்காசிய விருது அப்துர் ரஹ்மானுக்கு - BCAS Campus நிறுவனத்திற்கும் விருது
'தூரநோக்குடனான தலைமைத்துவம்' என்ற தெற்காசிய விருது பொறியியலாளர் அப்துர் ரஹ்மானுக்கு!
'தூரநோக்குடனான தலைமைத்துவம்' என்ற தெற்காசிய விருது ( Visionary Leadership Award) பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 'SAPS Business Awards-2016' என்கின்ற விருது வழங்கும் விழா கடந்த 13.10.2016 அன்று கொழும்பில் நடை பெற்ற போதே BCAS Campus நிறுவனத்தின் ஸ்தாபகரும் அதன் தலைவருமான பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களுக்கு இந்த விசேட விருது வழங்கப்பட்டுள்ளது.
தெற்காசிய நாடுகளில் இயங்கும் பல்துறை வர்த்தக நிறுவனங்களினதும் தனிநபர்களினதும் சிறப்பு மிக்க அடைவுகளையும் பங்களிப்புக்களையும் மதித்து கௌரவிக்கும் வகையில் 'SAPS (South Asian Partnership Summit) Business Awards' எனும் தெற்காசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
உயர்கல்வி வாய்ப்புக்கள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும் இலங்கை போன்ற நாட்டில் தனியார் உயர்கல்வித்துறை மூலமாக பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் ஆற்றிவரும் தூரநோக்குடன் கூடிய சேவையினை மதித்து பாராட்டுமுகமாகவே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா போன்ற நாடுகள் வழங்கும் உயர் கல்வி வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வது பெரும் பாலான இலங்கை மாணவர்களுக்கு சாத்தியமில்லாத ஒன்றாக இருந்த கால கட்டத்தில் BCAS Campus என்ற தனியார் உயர் கல்வி நிறுவனத்தை ஸ்தாபித்த பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள் இன்று வரை அதன் தலைவராகவும் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் செயற்பட்டு வருகின்றார். அவரது தலமையிலும் நேரடி வழி காட்டலிலும் இயங்கும் BCAS Campus கடந்த 18 வருடங்களில் உயர்கல்வி வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ளத் தவறிய ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு அந்த வாய்ப்பினைப் பெற்றுக் கொடுத்துள்ளது. மாத்திரமின்றி இலங்கையில் அரச உயர் கல்வித்துறையில் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த தொழில்சார் துறைகளுக்கான வாய்ப்புக்களையும் விரிவு படுத்தி எல்லோருக்குமான வாய்ப்புக்களை பாரிய அளவில் அதிகரித்துள்ளது.
அது போலவே சர்வதேச தொழிற்சந்தையில் ஏற்பட்டு வரும் புதிய புதிய சவால்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ற கற்கை நெறிகளையும் உருவாக்கி வழங்கி வருகிறது.
இந்த தூரநோக்குடனான கல்விச்சேவையின் காரணமாக உயர்கல்வி வாயப்புக்களைப் பெறத்தவறிய ஆயிரக்கணக்கான மாணவர்கள் சர்வதேச உயர் கல்வித்தகைமைகளையும் உள்நாட்டு மற்றும் சர்வதேச தொழில் வாய்ப்புக்களைப் பெறுவதற்கு அப்துர் ரஹ்மானின் நேரடி வழிகாட்டுதலில் இயங்கும் BCAS Campus நிறுவனம் வழியமைத்துள்ளது.
இந்த சிறப்புச் சேவைகளையும் அடைவுகளையும் மதித்து, கௌரவித்து, பாராட்டுமுகமாகவே 'தூரநோக்குடன் கூடிய தலைமைத்துவம்' என்ற இந்த விசேட தெற்காசிய விருது பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
SAPS Business Awards எனும் விருது வழங்கும் நிகழ்வு கடந்த காலங்களில் பல்வேறு தெற்காசிய நாடுகளில் நடைபெற்று வந்த நிலையில் இம்முறை இலங்கையில் நடைபெற்றது. இந்த விருதுகளைப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ் மாலைதீவு , ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட எட்டு தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன. இலங்கையிலிருந்தும் பல துறைகளில் இயங்கும் அரச மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் பலவும் தனிநபர்களும் இவ்விருதுக்காக விண்ணப்பித்திருந்தனர்.
அந்த வகையில் தனியார் உயர் கல்வித்துறை நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவராக இருந்து ஆற்றிவரும் சேவைகளுக்காகவே பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் அவர்கள் இந்த விருதுக்காக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
அத்தோடு, BCAS Campus நிறுவனத்திற்கும் மற்றுமொரு விசேட விருது SAPS விருது வழங்கும் விழாவின் போது வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.
Congratulations
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ். மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் ரகுமான் அவர்களே.
ReplyDeleteஎன் இனிய நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ் உங்கள் தொடர் சேவைக்கு எனது வாழ்த்துக்கள்
ReplyDelete