A 9 வீதி மாணவர்களினால் முடக்கம், போக்குவரத்து பாதிப்பு, ஆளுநர் அலுவலகம் முற்றுகை
பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலையை கண்டித்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக A9 வீதியூடான போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
கொட்டும் மழையிலும் இன்று காலை யாழ் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் நடத்திவரும் இந்த போராட்டத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த நிலையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்த இடத்தில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் கடமையில் இல்லை.
சக மாணவர்களின் படுகொலைக்கு நீதிவேண்டி A9 பிரதான வீதியில் அமர்ந்து கொண்டு பல பதாதைகளை ஏந்தியவாறும் தமது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
மாணவர்களின் குறித்த போராட்டத்தினால் A9 வீதி முழுவதுமாக முடக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
2
கடந்த வெள்ளிக்கிழமை யாழ் பல்கலைகழக மாணவர்கள் இருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமையினை தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு சிங்கள மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த மாணவர்களின் படுகொலையினை கண்டித்து யாழ் நகரப்பகுதிகளில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இந்த போராட்டம் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் யாழ்ப்பாண கச்சேரியின் வாயிலை மறித்து தற்போது போராட்டத்தில் ஒரு பகுதி மாணவர்கள் ஈடுபட்டு வருகின்ற நிலையில் ஆளுநர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் குறித்த படுகொலை தொடர்பில் வடக்குமாகாண ஆளுநர் எந்தவித கருத்துக்களையும் கூறவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
Arsangaththai ikkattil maaty thalli veduvathatkaha. Metkonda kola iya ha irrukkalaam.
ReplyDeleteMuslim maanewarhalum inaithu porattam seiya wendum
ReplyDelete