ஜனாதிபதி, பிரதமருக்கான செலவீனம் கிடுகிடு என உயர்வு
2017ம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்ட ஒதுக்கீட்டு சட்டமூலம் நிதியமைச்சர் ரவி -20- கருணாநாயக்கவினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்கமைய 2017ம் ஆண்டு தொடர்பில் எதிர்ப்பார்க்கப்படும் அரசாங்க செலவு 1819.5 பில்லியன் ரூபா எனத் தெரியவந்துள்ளது.
2016ம் ஆண்டில் 1941.4 பில்லியன் ரூபாவாக இந்தத் தொகை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் 2016ம் ஆண்டு 2.3 பில்லியன் ரூபாவாக உத்தேசிக்கப்பட்ட ஜனாதிபதிக்கான செலவீனம், 2017ம் ஆண்டு ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் படி, 6.45 பில்லியன் ரூபாவாக காணப்படுகின்றது.
அதேபோன்று 2016ம் ஆண்டு 0.4 பில்லியன் ரூபாவாக இருந்த பிரதமரின் செலவீனம், 2017ம் ஆண்டு ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் படி, 1.25 பில்லியன் ரூபாவாக காணப்படுகின்றது.
மேலும், 2017ம் ஆண்டு ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் படி, பாதுகாப்பு அமைச்சுக்காக 284 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. (கடந்த வருடம் இது 22 பில்லியன் ஆகும்.)
சுகாதார அமைச்சுக்காக 160.9 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. (கடந்த வருடம் இது 174.9 பில்லியன் ஆகும்.)
கல்வி அமைச்சுக்காக 76.9 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. (கடந்த வருடம் இது 185.9 பில்லியன் ஆகும்.)
Now everyone knows the definition of "YAHAPALANAYA".
ReplyDelete