பௌத்த பிக்குகளில் 60 வீதமானவர்களுக்கு நீரிழிவு, இருதய நோய்
பௌத்த பிக்குகளில் 60 வீதமானவர்களுக்கு நீரிழிவு மற்றும் இருதய நோய்கள் காணப்படுவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலமாக பௌத்த பிக்குகள் நீரிழிவு, இருதய நோய் உள்ளிட்ட தொற்றா நோய்களினால் பாதிக்கப்படும் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.
கண்டி அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடாதிபதிளை சந்தித்ததன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பிக்குகள் சமூகத்தில் சுமார் 60 வீதமானவர்கள் நீரிழிவு மற்றும் மாரடைப்பு போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கைகளின் மூலம் தெரியவந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பௌத்த கலாசார உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் இவ்வாறான நோய்களை தடுக்க முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment