Header Ads



கொழும்பில் 5 பேருக்கு, மரண தண்டனை

ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் 5 குற்றவாளிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

உறவினரான சகோதரர் ஒருவரை கொலை செய்த 5 பேருக்கே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி என். ரணவக்க இந்த மரண தண்டனையை விதித்துள்ளார்.

2001ஆம் ஆண்டு மருதானை சங்கராஜ மாவத்தை பிரதேசத்தல் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் 5 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

வழக்கு விசாரணைகளில் குற்றம் சுமத்தப்பட்ட நபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.