3 தவறுகள் செய்த ஜனாதிபதி, அசாத் சாலியிடம் கேட்ட 1 கேள்வி
கடந்த அரசாங்கத்தை விடவும் இந்த அரசாங்கம் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்தப்பில் அவர் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்…
மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை துறந்து தேர்தலில் போட்டியிட்டமையால், சுயாதீனமான நபர் ஒருவராகவே அவருக்கு நாம் ஆதரவளித்தோம்.
அவர் இழைத்த முதலாவது தவறு மீளவும் சென்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டமையாகும்.
ஊழல் மோசடிகள் திருட்டில் ஈடுபட்டவர்களை அமைச்சரவையில் இணைத்துக்கொண்டமை அவர் இழைத்த இரண்டாவது தவறாகும்.
மூன்றாவது தவறாக நாம் கருதுவது அவர் அண்மையில் வெளியிட்ட கருத்தாகும்.
நான் தனிப்பட்ட ரீதியில் சென்று அவரிடம் கேட்டேன் நீங்கள் இதனை அமைச்சரவையில் கூறியிருக்க வேண்டும் என்றேன்.
இல்லை இது பற்றி ஒரு ஆண்டாக நான் அமைச்சரவையில் பேசி வருகின்றேன் எனினும் எவரும் கண்டுகொள்ளவில்லை என அவர் பதிலளித்தார்.
அதன் காரணமாகவே நான் மக்கள் முன்னிலையில் இதனைக் கூறினேன் என ஜனாதிபதி கூறினார்.
ஜனாதிபதி என்னிடம் கேட்டார் “ மோசடி தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சியின் ஒர் பிரதேச சபை உறுப்பினரேனும் கைது செய்யப்பட்டுள்ளார்களா” என்றார்.
எனக்கு அதற்கு பதிலளிக்க முடியவில்லை. அது ஒரு வகையில் சரியானதேயாகும்.
அன்று நாம் பசில் ராஜபக்சவை மிஸ்டர் 40 வீதம் என்றே அழைத்தோம்.
40 வீத தரவினை தற்போது மேலிருந்து கீழ் மட்டம் வரையில் வழங்க வேண்டியுள்ளது.
ராஜபக்சக்கள் அமர்ந்திருந்து களவெடுத்தார்கள், இவர்கள் ஓடிக்கொண்டே கொள்ளையிடுகின்றார்கள் என அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
So என்னதான் செய்யலாம் அக்கர மாட்டுக்கு இக்கர பச்சயாம் அதுதான் உண்மை இவர் ஒரே கரையில் இருந்தாலே what the reality can find இல்லாடி
ReplyDeleteபோத்திக்கிட்டு படுத்துகலாம் படுத்துகிட்டு போத்திகலாம் ஐஸ் அடிக்குது ஐஸ் அடிக்குது என பாடிக்கொண்டே கூடிய சீக்கிரம் ஒத வாங்குவீங்க