Header Ads



'முஸ்லிம்களது இனச் சுத்திகரிப்பிற்கு 26 வருடங்கள்'

-மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்-

1990 ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி முதல், 30 ஆம் திகதி வரை, மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களில் இருந்தும் வடபுல முஸ்லிம்கள் முற்றாக இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டு ஆயுத முணையில் விடுதலைப்புலிகளால் ஒரு சில மணித்தியால அவகாசமே வழங்கப்பட்டு துரத்தியடிக்கப்பட்டு இன்றோடு 26 வருடங்கள் நிறைவடைகின்றன.

தமிழ் மக்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகள் இழைத்த முதன்மையான மிகப்பெரிய அரசியல் இராணுவ மற்றும் வரலாற்றுத் தவறு முஸ்லிம்கள் நிராயுத பாணிகளான முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விட்ட இனச் சுத்திகரிப்பு மற்றும் வடகிலும் கிழக்கிலும் எல்லைக் கிராமங்களிலும் மேற்கொண்ட படுகொலைகளுமாகும்.

முதிர்ச்சியடைந்த தமிழ் முஸ்லிம் தலைமைகளை படுகாலை செய்தமை, இந்தியாவை பகைத்துக் கொண்டமை, சமாதானக் கரம் நீட்டிய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியையும் மற்றும் இலங்கை ஜனாதிபதி பிரேமதாச அவர்களையும் படுகொலை செய்தமை, சர்வதேச பிராந்திய மேலாதிக்க சகதிகளிடம் விலை போனமை போன்ற இன்னும்பல அரசியல் இராஜதந்திர தவறுகள் அவர்களை அழிவின் விளிம்பிற்கே கொண்டுசேர்த்த ஏனைய தவறுகளாகும்.

இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வுகளைப் பற்றி தேசிய பிராந்திய சர்வதேச அரங்கில் பேசுகின்ற எந்தவொரு சமகால தமிழ்த் தலைமையும் விடுதலைப் போராட்டத்தின் பேரில் முஸ்லிம்கள் மீது இழைக்கப்பட்ட மேற்படி வரலாற்றுத் தவறுகளை சீர் செய்கின்ற முன்னெடுப்புக்களை முதன்மைப் படுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.

கிடப்பில் போடப்பட்டுள்ள முஸ்லிம்களது மீள் குடியேற்றம், அவர்களுக்கான அடிப்படை வாழ்வாதார, கல்வி சுகாதார, நிர்வாக வசதிகளை உட்கட்டமைப்புக்களை ஏற்படுத்துதல், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களது நிலங்களை மீளப் பெற்றுக் கொடுத்தல், அரசியல் தீர்வு முயற்சிகளில் முஸ்லிம்களின் தனித்துவ தேசிய அடையாளத்தை அங்கீகரித்தல் போன்ற இன்னோரன்ன முன்னெடுப்புக்களை தமது நிகழ்ச்சி நிரல்களில் அவர்கள் உள்வாங்குவது தார்மீகக் கடமையாகும்,

முஸ்லிம் அரசியல் தலைமைகள் கவனத்திற்கு

வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் பாசிசப் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப் பட்டு கால் நூற்றாண்டு கழிந்த நிலையிலும் அவர்களது மீள் குடியேற்றம் குறித்து ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பது எல்லோரும் அறிந்த விடயமாகும்.

போருக்குப் பின்னரான இலங்கையில் பழைய IDP கள் என அவர்கள் புறந்தள்ளப்பட்டு மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் உடனடியாக பாதிப்படைந்தவர்கள் என புதிய IDP கள் மீது மாத்திரமே கூடிய கரிசனை காட்டப் படுகின்றமை நாம்அறிந்த விடயமாகும்.

இனி, தற்போதைய கூட்டாட்சியில் நம்பிக்கை தரும் முன்னெடுப்புக்கள் இடம்பெறுமா என அவர்கள் ஆவலோடு காத்திருக்கின்றார்கள்.

இடம் பெயர்ந்துள்ள முஸ்லிம்கள், அவர்களது சனத்தொகைப் பெருக்கம், அதிகரித்துள்ள புதிய குடும்பங்கள், அவர்களில் மீள்குடியேற விரும்புபவர்கள் என இன்னோரன்ன தகவல்கள் முறையாக இதுவரை ஆவணப் படுத்தப்படவில்லை.

அதேபோல் வடபுலத்தில் உரிய உட்கட்டமைப்பு வசதிகள், பொது வசதிகள், நீர் வழங்கல், மின்சாரம், பாடசாலைகள் , மஸ்ஜிதுகள்,அரச நிறுவனங்கள் என எத்தகைய அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில் மீள் குடியேறுவதில் மக்கள் காட்டும் அசிரத்தை முறையான பதிவுகள் இல்லாமைக்கு காரணமாக இருப்பதாக சொல்லப்படுகின்றது.

புதிய தலைமுறையினரின், கல்வி, தொழில் தற்போதைய வதிவிடங்கள், தாம் ஈட்டிய அசையா சொத்துக்கள் எனபல்வேறு அம்சங்களும் மீள் குடியேறுவதில் கரிசனயின்மையை ஏற்படுத்தியுள்ளமை அவதானிக்கப்படுகின்றது.

எது எப்படிப் போனாலும் வடபுலத்தில் இருந்து புலம் பெயர்ந்த ஒவ்வொரு பிரஜையும், குடும்பமும், அவகளது புதிய தலைமுறையினரும் தமது பூர்வீக இடங்களுக்கும் வளங்களுக்கும் உரித்துடையவர்கள் என்பதனை வலியுறுத்திக் கூறல் வேண்டும்.

உடனடியாக மீள்குடியேற வேண்டிய முஸ்லிம்கள் குறித்த துள்ளியமான தரவுகளை புள்ளி விபரங்களை திரட்டுவதும் ஆவணப்படுத்துவதும் அதற்காக அரச யந்திரத்தை வளங்களை உரியவகையில் பெற்றுக் கொள்வதும் முஸ்லிம் அரசியல் மற்றும் சிவில் தலைமகளின் முதன்மையான பணியாகும்.

1990 அக்டோபர் 30 ஆம் நாள் ஒட்டு மொத்த வடபுலத்து முஸ்லிம்களும் விடுதலைப் புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட பின்னர் மூன்று தசாப்த காலம் அவர்கள் பெயரில் நாம் அரசியல் செய்திருக்கின்றோம், மாறாக அவர்களுக்கு எம்மால் ஆக்கபூர்வமாக எதையுமே செய்யமுடியவில்லை என்பதே கசப்பான உண்மையாகும்.

2 comments:

  1. இலங்கை முஸ்லிம்களின் பொருமையும் கூடிய ஷஹிப்புத்தன்மையின் காரணமாகவும் வடகிழக்கு சகோதர சகோதரிகளின் கிரயமான துஆக்கலின் பழனே காரணமானவர்கள் கண்முன்னாலே அழிந்தார்கள் இதுதான் உண்மை
    அல்லாஹு அக்பர்

    ReplyDelete
  2. 1.First of all we have to prepare full report of people who had been lived at that time and there land details.
    2. How many of them rehoused and went back to there places now.
    3. How many people hav still not return to there places.
    4.what the solution put forward to the government to rehousing these people by the so called out Muslim politician
    5.full report must be published in the news paper, at least with out the name
    5. So far these news is not clearly presented to any one in Sri Lanka as I believe

    Above are some of my suggestion only.

    ReplyDelete

Powered by Blogger.