2017 இற்கான பட்ஜெட்டுக்கு, எதிராக போராட்டம்
இம்முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டத்திற்கு எதிராகவும் தாம் போராட தயாராக இருப்பதாக அனைத்து பல்கலைக்கழக ஒன்றியத் தலைவர் லகிரு வீரசேகர தெரிவித்தார்.
கொழும்பில் இன்று -21- இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.
2017 இற்கான நிதி ஒதுக்கீட்டு பிரேரணை ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரேரணையில் சுகாதாரம் மற்றும் கல்விக்கு குறைவாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை நாட்டின் எதிர்காலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
மேலும் இவ்வாறு நாட்டின் முக்கிய துறைகளுக்கு குறைவான நிதியை ஒதுக்கியவர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் செலவுகளுக்கு அதிகளவு நிதியை ஒதுக்கி உள்ளமை சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த செயற்பாடானது நல்லாட்சியின் முறையற்ற தன்மையை காட்டுகின்றது, இந்த அரசாங்கத்தால் எதிர்காலத்தில் பல்கலைக் கழகங்களின் அபிவிருத்தியை அதிகரிப்போம் கல்வியை முன்னேற்றுவோம் எனும் பல வாக்குகள் கடந்த காலத்தில் வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் அவை எதுவும் நிறைவேற்றப்படமாட்டாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை கடந்த வரவு செலவு திட்டத்திற்காக போராடியது போன்று இம்முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டத்திற்கு எதிராகவும் போராட மக்களுடன் நாங்கள் ஒன்றிணைவோம் எனவும் லகிரு வீரசேகர தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment