Header Ads



கொலை செய்யப்பட்ட புலி உறுப்பினரின் குடும்பத்துக்கு 20 இலட்சம் வழங்கிய இராணுவ வீரர்

ராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப்புலிகள் உறுப்பினரொருவரை கொலைசெய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள்  இராணுவ லெப்டினன் விமல் விக்ரம கொலைசெய்யப்பட்டவரின் குடும்பத்துக்கு இழப்பீடாக 20 இலட்சம் ரூபா செலுத்தியுள்ளார்.

குறித்த இழப்பீட்டு தொகையை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன முன்னிலையில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு வழங்கியுள்ளார்.

உயிரிழந்தவரின் மனைவி மற்றுமொரு திருமணம் முடித்துள்ளதால், உயிழந்தவரின் மனைவிக்கு ரூபா 10 இலட்சமும், உயிழந்தவரின் தந்தைக்கு ரூபா 10 இலட்சமும் இழப்பீடு தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

இராணுவ லெப்டினன் விமல் விக்ரமவுக்கு 10 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், 10 வருட சேவை இடைநீக்கம் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

5 comments:

  1. திரிவுபடுத்தப்பட்ட செய்தி. சுடப்புபட்டவர் புலி உறுப்பினர் அல்ல.பிணத்தின் மீது இனவாதம் செய்யும் வங்குரோத்து ஊடகம்.
    தவறு செய்த ராணுவ வீரனை நல்லவனாக காட்ட தமிழனை தீவிரவாதி ஆக்கியிருக்குறீர்.

    ReplyDelete
  2. Ltteku kappam kodutha ellorum ltte thaan.

    ReplyDelete
  3. தமிழ்ப் பயங்கரவாதிக்கு கூட, நியாயம் கிடைத்திருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. @ISIS RACIST உமக்கு இனவெறி தலைக்கேறி விட்டது.

      Delete
    2. அரசும், குடும்பமும், நீதிமண்றமும் ஏற்றதை இந்த திரிவுபடுத்தும் RACIST ஆல் பொறுக்க முடியவில்லை, இன வெறியின் முளுவுருவம் நீரே...

      Delete

Powered by Blogger.