2 பேரை சுட்டுக்கொல்ல இந்திய இராணுவத்திற்கு 58 மணித்தியாலம் தேவைப்பட்டது
இந்தியா நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில் ஆயுதமேந்தியவர்களுக்கும் இந்திய ராணுவத்திற்கும் நடைபெற்ற மூன்று நாள் சண்டை இன்று முடிவுக்கு வந்துள்ளது.
காஷ்மீரின் முக்கிய நகரான ஸ்ரீநகருக்கு அருகில் இருந்த காலியான கட்டடத்தில் பதுங்கி தாக்குதலில் ஈடுபட்டு வந்தத இரண்டு ஆயுதமேந்தியவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு இந்த சண்டை முடிவுக்கு வந்ததாக ராணுவ செய்திதொடர்பாளர் மேஜர் ஜெனரல் அஷோக் நருலா தெரிவித்துள்ளார்.
அந்த கட்டடம் சோதனையிடப்பட்டது என்றும், அதிலிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி மாதத்தில், அதே பகுதியில் உள்ள வேறொரு கட்டடத்தை ஆயுதமேந்தியவர்கள் குறி வைத்ததன் விளைவாக நடந்த துப்பாக்கிச் சண்டையில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
56 மணி நேரம் நீடித்த அந்த தாக்குதலுக்குள்ளான கட்டடத்தின் அனைத்து சுவர்களும் சேதமடைந்து கட்டடத்தின் கம்பிகள் மட்டுமே தெரியும் நிலையில் உள்ளது.
கொல்லப்பட்ட ஆயுதமேந்தியவர்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன ஆனால் ஆரம்ப கட்ட விசாரணையில் அவர்கள் லஷ்கர் தொய் பா வுடன் தொடர்பு கொண்டவர்களாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்ததாக பிடிஐ செய்தி முகமையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதம், காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மிகவும் தூரத்தில் இருந்து சுட்டிருப்பார்கள் போல.
ReplyDeleteIndian Armiyey Thirumbawum ilangaykuk konduwara neridum poala
ReplyDeleteAanalum paravaiella muslim naadukalil 1000 paru entrulum 2s poothum
ReplyDelete