மலேரியா நோயை முற்றாக ஒழித்த, நாடுகளின் வரிசையில் சிறிலங்கா - முக்கிய சாதனை என்கிறது WHO
சிறிலங்காவை மலேரியா நோயில் இருந்து விடுபட்ட நாடாக, உலக சுகாதார நிறுவனம் நேற்று பிரகடனப்படுத்தியுள்ளது. நுளம்புகளால் பரவும் மலேரியா நோயை முற்றாக ஒழித்துள்ள நாடுகளின் வரிசையில் சிறிலங்கா இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மலேரியாவின் பாதிப்பு அதிகம் இருந்த நாடுகளில் ஒன்றாக சிறிலங்கா விளங்கியது.
தற்போது, அந்த நோயை முற்றாக இல்லாதொழித்த நாடுகளின் வரிசையில் சிறிலங்கா இடம்பெற்றுள்ளமை முக்கியமான சாதனை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
தெற்காசியாவில் மாலைதீவுகளை அடுத்து, மலேரியாவை முற்றாக அழித்த இரண்டாவது நாடாக சிறிலங்கா இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment