முஸ்லிம் MP களின் எண்ணிக்கை, நமக்குரிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தவில்லை - அப்துர் ரஹ்மான்
"பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பானது நமது சமூகத்தின் நலன்களுக்கான பாதுகாப்பினை அதிகரித்திருகின்றதா என்றால் இல்லையென்றே சொல்ல வேண்டு. எனவே, முஸ்லிம் சமூகமானது பாரளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டுமா அல்லது பாரளுமன்றம் செல்பவர்களின் தரத்தை அதிகரிக்கப்பதில் கவனம் செலுத்த வேண்டுமா என சிந்திக்க வேண்டும்" என பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
'நேத்ரா' தொலைக்காட்சியில் இடம் பெற்ற 'வெளிச்சம்' அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கருத்துத் தெரிவிக்கும் போதே நலழலாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) தவிசாளர் அப்துர் ரஹ்மான் இவ்வாறு தெரிவித்தார். பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் மேலும் தெரிவித்ததாவது:
"புதிய யாப்புருவாக்க முன்னெடுப்புக்கள் மும்மூரமாக நடைபெற்று வருகின்றன. தேர்தல் திருத்தம் என்பது இதில் ஒரு முக்கிய பகுதியாகும். தற்போது உத்தேசிக்கப்படும் புதிய தேர்தல் முறைபற்றி அரசியல்வாதிகள் கூட இன்னும் சரியாக புரிந்து கொள்ளவில்லை. 'தொகுதி' என்ற வார்த்தை இங்கு பாவிக்கப்படுவதன் காரணமாக , பாரளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி அடிப்படையிலேயே தெரிவு செய்யப்படப் போகிறார்கள் என எல்லோரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள். அப்படியில்லை. ஏனெனில் , உருவாக்கப்படப் போகும் புதிய தேர்தல் முறையானது முழுக்க முழுக்க விகிதாசார முறை அடிப்படையிலானதே ஆகும். உள்ளுராட்சி மன்றங்களுக்காக உருவாக்கப்பட்டிருப்பது போல இது தொகுதி வாரி முறையும் விகிதாசார முறையில் கொண்ட கலப்பு முறையும் அல்ல.
தற்போது மாவட்ட ரீதியில் அமுல்படுத்தப்படும் தேர்தல் முறை தேசிய மட்டத்திலான விகிதாசார முறையாக அமுல்படுத்தப்படவிருக்கிறது. இதனை மாகாண விகிதாசார முறையாக அமுல்படுத்துவது தொடர்பிலும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆக, முழுக்கமுழுக்க விகிதாசார முறையிலேயே பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படப்போகிறார்கள். அவ்வாறு தெரிவு செய்யப்படுபவர்களில் ஒரு தொகையினர் தேர்தல் தொகுதிகளுக்குப் பொறுப்பான மக்கள் பிhதிநிதிகளாக தெரிவு செய்யப்படுவார்கள்.
எனவே, உருவாக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை தெரிவு செய்யப்படப்போகும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை பாதிக்கப்போவதில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.
இதனை இன்னுமொரு கோணத்திலும் பார்க்க வேண்டும். அதாவது, புதிய தேர்தல் முறையினை எமது சமூக நலனின் அடிப்படையில் நின்றே எல்லோரும் நோக்குகின்றோம். பாராளுமன்ற உறுப்பனர்களை கொண்டு நமது சமூக நலன்களை எவ்வாறு பாதுகாக்கலாம் என்றே சிந்திக்கப்படுகின்றது.
கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் பார்க்கும் போது பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பானது நமது சமூகத்தின் நலன்களுக்கான பாதுகாப்பினை அதிகரித்திருகின்றதா என்றால் இல்லையென்றே சொல்ல வேண்டும். கடந்த ஆட்சியின் போதும் அது போன்ற இன்னும் பல சந்தர்ப்பங்களிலும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை நமக்குரிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தவில்லை என்பதே நமது அனுபவமாகும்.
எனவே, முஸ்லிம் சமூகமானது பாரளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிரிப்பதில் கவனம் செலுத்த வேண்டுமா அல்லது பாரளுமன்றம் செல்பவர்களின் தரத்தை அதிகரிக்கப்பதில் கவனம் செலுத்த வேண்டுமா என சிந்திக்க வேண்டும்"
Best question
ReplyDeleteபுண்ணாக்கு ஹக்கீம் என்ன செய்யுது?
ReplyDeleteஒவ்வொரு தமிழ் வீட்டிலும் போய், இட்டலியும் வடையும் சாப்பிட்டு, தனது தொந்தியை நிரப்பிக் கொண்டிருக்கிறது.