Mp களில் சிலர், 4 கால்களைக்கொண்ட உயிரினங்களது குரல்களை எழுப்பினர் - சபாநாயகர் ஆத்திரம்
சுயாதீன ஆணைக்குழுக்களுக்களின் பணிப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பான யோசனை மீதான விவாதம், நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை (21), நடைபெற்ற போது, எம்.பி.மார்களில் சிலர், நடந்துகொண்ட முறை குறித்து, சபாநாயகர் கரு ஜயசூரிய, நேற்று வியாழக்கிழமை (22), தனது அதிருப்தியை வெளியிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், இனிமேல் இவ்வாறாக நடந்துகொள்வார்களாயின், அவர்களுக்கெதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், சபாநாயகர் நேற்று சபை அமர்வின் ஆரம்பத்தின் போது தெரிவித்தார்.
இதன்போது உரையாற்றிய சபாநாயகர்,
“நாடாளுமன்றத்துக்குள், எம்.பி.க்கள், ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக்கொண்டு, நிலையியற்கட்டளைக்கு எதிராகச் செயற்பட வேண்டாமென, மதிப்புக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
அத்துடன், “நேற்று (புதன்கிழமை), சில பல சம்பவங்கள், அவைக்குள் இடம்பெற்றன. ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர், நான்கு கால்களைக் கொண்ட உயிரினங்களது குரல்களை எழுப்பியவாறு, ஒழுக்கயீனமாக நடந்துகொண்டனர்.
இது, நாட்டின் அனைத்து மக்களினதும் அவதானத்தை ஈர்த்துள்ளதுடன், கடுமையான அதிருப்திக்கும் உள்ளாகியுள்ளது. இனிவரும் காலங்களில், அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுமாயின், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என சபாநாயகர், மேலும் கூறினார்.
பாராளுமன்றத்திற்கு மக்கள் பிரதி நிதியாக தெரிவாகி செல்பவர்களானாலும், துரத்தியடிக்கப்பட்ட பின் சனாதிபதியினால் தெரிவு செய்யப்பட்டு பின் வாசல் வழியாக வந்தவர்களானாலும் சரி இரண்டும் ஒன்றுதான். தெரிவு செய்யப் படுவதில் ஒரு சில ஒற்றுமைகள் இருக்கின்றன
ReplyDelete1. மக்கள் நிதியை கொள்ளையடித்து ஏப்பம் விட்டிருக்க வேண்டும்
2. அடாவடித்தனம் செய்யக்கூடிய மனதைரியமும் அடியாட்களும் இருக்க வேண்டும்
3. குடியில் மகுடம் சூடியிருக்க வேண்டும்
இவ்வாறான கிழ்த்தரமானவர்களை நாடாளுமன்றத்துக்கு யார் தெரிவு செய்தாலும், மிருகங்கள் போல் குரல் எழுப்புவது மட்டுமல்ல, நான்கு கால் மிருகங்கள் போன்றுதான் நடந்து கொள்வார்கள் விதைத்தது தானே முளைக்கும்? நெரிஞ்சியை விதைத்து விட்டு நற்றாமரையை எதிர்பார்க்க முடியுமா?
நாலு கால் மிருகங்கள் என்றால் நாயா?மாடா?அல்லது கழுதையா?
ReplyDelete