இனவாதத்தினை தூண்டுவதே, விக்கினேஸ்வரனுக்கு அவசியமாக உள்ளது - JVP
வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு இனவாதத்தினை தூண்டுவதே அவசியமாக உள்ளதாக கோப் குழுவின் தலைவரும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி குற்றம் சுமத்தியுள்ளார்.
நேற்று முன்தினம் (24) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எழுக தமிழ் பேரணியின் போது முன்வைக்கப்பட்ட சமஷ்டி கோரிக்கை தொடர்பில் ஹந்துன் நெத்தியிடம் வினவிய போதே இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடக்கு முதலமைச்சர் சீ.வி விக்கினேஸ்வரன் தலைமையிலானோருக்கு தற்போது தேவையானது சமஷ்டி தீர்வல்ல, அதற்கு மாறாக தெற்கில் இனவாதத்தை தூண்டுவதே அவசியமாக உள்ளது என குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டில் உள்ள மக்களிடையே பிரிவினை வாதத்தை ஏற்படுத்துவதற்கு இவர்கள் முயற்சிக்கின்றனர், இது தவறான விடயம்.
எனவே ஒற்றையாட்சி மூலம் மாத்திரமே அதிகாரப் பரவலாக்கம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
The Tamil community has missed many chances because of their leaders. As one country without any division, the Tamil leaders should do their best to get maximum possible rights of the Tamil community through democtatic process under Yahapaalanaya. Thirty years suffering is enough.
ReplyDeleteRacist Vicky should be arrested and should be behind bars.
ReplyDelete