Header Ads



சுலைமான் கொலை - GPS தொழிநுட்பம் மூலம் விசாரணை

பம்பலபிட்டி வர்த்தகர் மொஹமட் சுலைமான் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 9 சந்தேகநபர்களினால் பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் அவர்களின் கையடக்க தொலைபேசிகளை மொறட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி GPS தொழிநுட்பம் கொண்டு சோதனைகளை மேற்கொண்டு அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று -29- உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர்களினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த பிணை விண்ணப்பங்களை நிராகரித்ததுடன் அவர்களை ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.

இவர்களை பிணையில் செல்ல அனுமதிக்க முடியாது காரணம் இவர்கள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் என நீதவான் கூறியுள்ளார்.

மேலும், சுலைமானின் பிரேத பரிசோதனை அறிக்கையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி சமர்பிக்க உள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு நீதிமன்றில் அறிவித்துள்ளது.

வர்த்தகர் சுலைமான் கடந்த மாதம் 21 ஆம் திகதி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.