Header Ads



அக்குரனை யகீன் மொடல் ஸ்கூல் + நிஸ்வான் மொடல் ஸ்கூலின் கல்விக் கண்காட்சி (EXHIBITION)

யகீன்  மொடல் ஸ்கூல்


கண்டி அக்குரனை யகீன்  மொடல் ஸ்கூல் மற்றும் அதன் பெண்கள் பிரிவான நிஸ்வான் மொடல் ஸ்கூல் ஆகிய ஆங்கில மொழி மூலப் பாடசாலைகளின் கல்வி கண்காட்சி 28 / 29 / 30 ம் திக திகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை  நடைபெற ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது .

பாடசாலை வகுப்புகளில் கற்கக் கூடிய பாடங்களின் செயல் ரீதியான பயன் பாட்டை விளக்க கூடிய,  பாடங்களுடன் சம்பந்தப் பட்ட  ஏராளமான காட்சி ப் பொருட்கள் இங்கு பார்வைக்காக வைக்க படவுள்ளன .மாணவா்களின் திறமை ஆக்கபூர்வமான கற்பனை என்பவற்றை வளர்க்கக் கூடிய 500 இற்கும் மேற்பட்ட இவ்வாறான பொருட்கள் இக்கண்காட்சியில் காட்சிப் படுத்த ப்படவுள்ளன .
நிஸ்வான் மொடல் ஸ்கூல்

கண் காட்சியின் முதல் இரு நாட்கள் ( 28 / 29 ) பெண்கள் மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட ஆண்  பிள்ளைகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது . கண்காட்சியின் 3ம் நாள் ( வெள்ளிக் கிழமை ) ஆண்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது . இஸ்லாமிய சூழலில் மஹ்ரம் அடிப்படையில் இவ்வொழுங்குகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் அல்ஹாஜ் மௌலவி அஸ்ஹர்தீன்  ( ஹாஷிமி) தெரிவித்தார் .

குறிப்பாக இக்கண்காட்சி  க.பொ. த ( சாதாரண தர ) வகுப்புக்கு கீழ்ப்பட்ட மாணவ மாணவியருக்கும் , மத்ரசா மாணவ  மானவியருக்கும் மற்றும் ஆர்வமுடைய சகலருக்கும் பிரயோசணமான முரையில் வடிவமைக்கப் பட்டுள்ளதாக மேலும் கூறினார் .

பாடசாலைகளுக்கும் மதரசாக்களும் நேரங்களைப் பதிவு செய்து கொள்வதற்காக 0812 301 401 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.



No comments

Powered by Blogger.