Header Ads



முக்கிய அமைச்சர்களை வைத்துக்கொண்டு, மதுபோதையில் மஹிந்தவுக்கு Call எடுத்த தொண்டா..!

அமைச்சர் பதவியை இழந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் நாடாளுமன்ற வீதியில் உள்ள அவரது வீட்டில் விஸ்கி, பிராண்டி மற்றும் வோல்கா போன்ற மதுபான வகைகளுடன் கடந்த திங்கட்கிழமை இரவு விருந்து ஒன்றை நடத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர ஆகியோருக்கு இந்த விருந்தை வழங்கியுள்ளார்.

விருந்திற்கு முன்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பிரத்தியேக செயலாளர் உதித்த லொக்கு பண்டாரவிற்கு அழைப்பை மேற்கொண்ட தொண்டமான், “தான் துமிந்த மற்றும் அமரவீரவிற்கு இரவு விருந்து வழங்குகின்றேன் தலைவரிடம் சொல்லுங்கள். வருத்தமடைய வேண்டாம். நான் எப்போதும் தலைவரோடு இருப்பேன்” என்று கூறுங்கள் என தொண்டமான் தெரிவித்துள்ளார்.

“துமிந்தவும் அமரவீரவும் என்னுடைய நண்பர்கள் சில காலமாக நான் அவர்களை சந்திக்கவே இல்லை, எனவே அவருக்கு இந்த விருந்தை ஏற்பாடு செய்தேன் எனவும் மற்றவர்கள் கட்டுக்கதை கட்டும் முன் இதை நமது தலைவரிடம் தெரிவித்து விடுங்கள்”என்றும் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த உதித்த லொக்குபண்டார, விருந்து தொடர்பில் தலைவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் அவர்களுக்கு விருந்தை வழங்கி அவர்களது எதிர்கால திட்டம் தொடர்பிலான விபரங்களை தெரிந்து கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்

மஹிந்தவின் அனுமதியுடனேயே பதவியை இழந்தேன் என்றும் அரசாங்கத்தில் தன்னை இணைத்துக் கொள்வதற்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றுத் தருமாறும் துமிந்த மற்றும் அமரவீரவிடம் தொண்டமான் இதன் போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த 18 மாதங்களாக அமைச்சர் பதவியை இழந்த தனக்கு மிகவும் கடினமான நேரமாகவே இருந்தது என்று மது அருந்தியிருந்த தொண்டமான் அழுது கொண்டே குறித்த அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளார்.

தொண்டமானின் புலம்பலை கேட்ட பொதுச் செயலாளர்கள் இருவரும் விரைவில் இதற்கு ஏதாவது செய்ய தாம் முயற்சிப்பதாக உறுதியளித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.