இலங்கையில் மென்பானங்களால், சிறுவர்களுக்கு நீரிழிவு நோய்
இலங்கையில் மென்பானங்களால் சிறுவர்களுக்கு நீரிழிவு நோய் அதிகரிக்கும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சிறு குழந்தைகளுக்கு தேவையான சீனியின் அளவை விட இரண்டு மடங்கு சீனியின் அளவு குறித்த மென்பானங்களில் அடங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே தினமும் இந்த மென்பானங்களை அருந்தும் சிறுவர்கள் மிக விரைவில் நீரிழிவு நோய்க்கு உள்ளாவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் குழந்தை ஒன்றுக்கு ஒரு நாளைக்கு 4 தேக்கரண்டி சீனியின் அளவு தேவைப்படும் நிலையில் குறித்த மென்பானங்களில் 9 தேக்கரண்டி சீனி உள்ளடக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
எனவே இந்த நிலையினை கருத்திற் கொண்டே நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையினை குறைப்பதன் நிமித்தம் கடந்த மாதம் முதலாம் திகதி முதல் மென்பானங்களில் அடங்கியுள்ள சீனியின் அளவைக் குறிக்கும் வகையில் மென்பான போத்தல்களின் நிறங்களை காட்சிபடுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய மென்பானங்களை கொள்வனவு செய்பவர்கள் சீனியின் அளவு தொடர்பாக தெளிவினைப் பெற்றுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment