ஜும்ஆ தொழ சென்றவேளை, தேநீர்க்கடை தீப்பிடித்து எரிந்தது
அட்டாளைச்சேனை 10ஆம் பிரிவில் உள்ள தேநீர்க் கடையொன்று இன்று (23) நண்பகல் வேளை தீப்பிடித்து எரிந்துள்ளது.
குறித்த தேநீர்க் கடை உரிமையாளர் இன்று நண்பகல் வேளையில், ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றச் சென்ற வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்தர்ப்பத்தில், கடை பாரிய சுவாலையுடன் எரிவதைக் கண்ட பொதுமக்கள் அருகில் இருந்த ஆற்று நீர், கிணற்று நீர் போன்றற்றைக் கொண்டு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்துள்ளனர்.
இருந்த போதிலும் கடையின் ஒரு பகுதி மற்றும் அருகில் இருந்த மரங்கள் எரிந்துள்ளதுடன், பாரிய தென்னை மரம் ஒன்றில் பிடித்த தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது.
இதனைத் தொடர்ந்து அக்கரைப்பற்று மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் அவ்விடத்திற்கு விரைந்து வந்து, தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இதேவேளை இப்பிரதேசத்திற்கு வருகை தந்த அட்டாளைச்சேனை பின்சார சபை ஊழியர்கள் இப்பகுதியின் மின் இணைப்பினைத் துண்டித்து மேலும் சேதங்கள் எதுவும் ஏற்படாதிருப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இத் தீ விபத்தினால் தனக்கு பல்லாயிரக் கணக்கான ரூபா பொருட்கள் மற்றும் உடமைகளின் சேதம் ஏற்பட்டுள்ளதாக தேநீர்க் கடை உரிமையாளர் தெரிவித்தார்.
குறித்த தீ எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில், அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Kedu varum bine mathi kettuvarum mune
ReplyDeleteIthellam antha uncle udaiya velaithan pol.
ReplyDelete